Thoothuvala Dosa: உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கும் தூதுவளை தோசை செய்வது எப்படி?.. இன்றே செய்து அசத்துங்கள்.!

நோய்களை விரட்டியடிக்க அனுப்பி வைக்கப்பட்ட தூதுவன் என்று போற்றப்படும் தூதுவளை உடலுக்கு நன்மைகள் செய்யும் மூலிகை வகைகளில் ஒன்றாகும்.

டிசம்பர், 11: நோய்களை விரட்டியடிக்க அனுப்பி வைக்கப்பட்ட தூதுவன் என்று போற்றப்படும் தூதுவளை (Purple Fruited Pea Eggplant), உடலுக்கு நன்மைகள் செய்யும் மூலிகை வகைகளில் ஒன்றாகும். நமது பற்கள், எலும்புகளை பலப்படுத்துகிறது.

குளிர்காலங்களில் தூதுவளை (Thoothuvalai) இலைகளை நீரில் சேர்த்து கொதிக்கவைத்து குடிக்கலாம். தூதுவளை இலையை நன்கு அரைத்து சாறெடுத்து மிளகுடன் சேர்த்து குடித்தால் சளித்தொல்லை நீங்கும், செரிமான மண்டலம் மேம்படும்.

இவ்வாறாக பல நன்மைகளை நமது உடலுக்கு வாரி வழங்கும் தூதுவளையை, தோசை மாவிலும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இதனால் குழந்தைகள் தூதுவளை பிடிக்காது என்று கூறினாலும், தோசையை காண்பித்து அவர்களை சாப்பிட வைத்திடலாம். NeemBrush: பற்களில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.. வேப்பங்குச்சி இருக்க கவலையேன்?..! 

தேவையான பொருட்கள்:

தூதுவளை கீரை - 1 கப்,

இட்லி அரிசி - 2 கப்,

உளுந்து - அரை கப்,

வெந்தயம் - 1 ஸ்பூன்,

இஞ்சி - 2 துண்டு,

பச்சை மிளகாய் - 3,

உப்பு - தேவைக்கேற்ப.

Thoothuvalai Dosa

செய்முறை:

முதலில் எடுத்துக்கொள்ளப்பட்ட அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் 3 மணிநேரம் வரை ஊறவைக்க வேண்டும். பின் அதனை வடிகட்டி இஞ்சி, மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதனுடன் உப்பு சேர்த்து வழக்கமான தோசை மாவு முறையில் புளிக்க வைத்துக்கொள்ளவும். பின் தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் சுவையான தூதுவளை தோசை தயார். தூதுவளை தோசையுடன் எள்ளுப்பொடி, பிரண்டை துவையல், கருவாட்டு குழம்பு போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 06:16 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif