Aging Caution: முதுமைக்கான காரணங்கள் என்னென்ன?.. விபரங்கள் இதோ.. தெரிஞ்சிக்கோங்க.!

இது சரும வறட்சி, சுருக்கம் ஆகியவற்றினை உண்டாக்கும். காபி அதிகம் பருகுவதும் நீரிழிவு பிரச்சனைக்கு வழிவகை செய்யும்.

Aging (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 17, சென்னை (Health Tips): முதுமை நம்மை வயதின் மூப்பினால் நெருங்கினாலும், இளமை தோற்றத்துடன் நாம் காட்சியளிக்க வேண்டும் என விரும்புகிறோம். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரையில், நமது அழகு என்பது எண்ணெய் தேய்த்து குளிப்பது, இயற்கையான மூலிகைகளை பயன்படுத்திய எண்ணெய்களை உபயோகம் செய்து, மூலிகை சாம்பிராணி என தொடர்ந்தது.

இன்றளவில் அவை அழகு சாதன பொருட்களின் மீதான மோகமாக திரும்பி இருக்கிறது. நமது உணவுப்பழக்கம், வாழ்க்கை முறைகள் போன்றவை இளமையை தக்கவைக்க உதவி செய்கிறது. சரும வயது, தோற்ற பொலிவு, மரபணு, சுற்றுசூழல் காரணி போன்றவற்றை தோற்றத்தினை நிர்ணயம் செய்கிறது.

சிலவகையான உணவுப்பழக்கம் முதுமைக்கு வழிவகை செய்யும். அதன்படி, அதிகப்படியான சர்க்கரையை எடுத்துக்கொள்வது கிளைகேஷின் செயல்முறைக்கு வழிவகை செய்து, சர்க்கரை மூலக்கூறுகள் சருமத்தின் கொலாஜன்களுடன் பிணைக்கப்பட்டு சருமத்தினை கடினமாகும். இது தோல் சுருக்கத்தினை உருவாகும். Reels Craze End Arrest: காவல் நிலையத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்து பதிவிட்ட 2 இளைஞர்கள் அதிரடி கைது; காவல் நிலையத்தில் சிறப்பு கவனிப்பு.!

பொரித்த உணவுகளில் இருக்கும் ஆரோக்கியம் இல்லாத கொழுப்புகள், அதிக சோடியம் உடல் வ்வேக்கத்திற்கு வழிவகை செய்யும். இவை தொடர்ந்தால் நாள்பட்ட அலர்ஜி ஏற்படும். கொலாஜெனில் பாதிப்பை உண்டாக்கி, தோல் வயதாகும் நிகழ்வை வேகமாக்கும்.

மதுபான பழக்கம் என்பது சருமத்தில் நீரிழப்பை ஏற்படுத்தும். இது சரும வறட்சி, சுருக்கம் ஆகியவற்றினை உண்டாக்கும். காபி அதிகம் பருகுவதும் நீரிழிவு பிரச்சனைக்கு வழிவகை செய்யும். இதனால் மந்தமான, வறண்ட, வயதான தோற்றம் உண்டாகும். இவற்றினை தவிர்ப்பது முதுமையை தாமதப்படுத்தும்.

செலரி, சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டு கடும் சூரிய ஒளியில் நேரத்தினை செலவிடுவது, சர்க்கரை கலந்த உணவுகள் மற்றும் ஆரோக்கியம் இல்லாத கொழுப்புகள் நிறைந்த உணவினை சாப்பிடுவதால் ஏற்படும் தோல் வயது மற்றும் சுருக்கம், அதிக வெப்பத்தில் துரிதமாக தயாரிக்கப்படும் சிலவாகை உணவுகளின் மூலக்கூறுகளின் காரணமாகவும் சருமம் முதிர்ச்சி அடையும்.