Avoid Heart Attack: இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க கட்டாயம் நாம் செய்யவேண்டிய விஷயங்கள் என்னென்ன?..!

இன்றளவில் நம்மிடையே மாறிப்போன பழக்கவழக்கம் மற்றும் உணவுமுறை காரணமாக ஆரோக்கியத்தில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

Template: Heart Health Improve

டிசம்பர், 7: நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்புகளில் முதன்மையானவற்றுள் இருப்பது இதயம் (Heart). நம் இதயம் ஆரோக்கியத்துடன் இருந்தால் நாமும் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழாலாம். இன்றளவில் நம்மிடையே மாறிப்போன பழக்கவழக்கம் மற்றும் உணவுமுறை காரணமாக ஆரோக்கியத்தில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மோசமான உணவுப்பழக்க வழக்கம், வாழ்க்கை முறைகள் போன்றவை இதயத்தின் ஆரோக்கியத்தை அழித்து வருகிறது.

உலகளவில் இதயம் சார்ந்த இறப்பு நோய்களே கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆகையால் இதயத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது கட்டாயமாகிறது. இதயம் தொடர்பான நோயை ஏற்படுத்த பல்வேறு காரணிகள் இருக்கின்றன. ஆனால், அதனை குறைக்க வழிவகை செய்யும் விஷயங்களும் உள்ளன. இதய ஆரோக்கியம் குறித்த நமது அக்கறையும், விழிப்புணர்வும் மட்டுமே நமது உடல்நலனை பாதுகாக்கும்.

புகை உடலுக்கு எமன்  (No Smoking): புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு எதிரானது என்பது அனைவர்க்கும் நன்றாக தெரிந்த விஷயம். ஆனால், அதனை தெரிந்தும் பலரும் புகைப்பழக்கத்தை நிறுத்துவது இல்லை. உங்களின் இதயத்திற்காகவாவது புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். சிகிரெட் புகையில் இருக்கும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான இரசாயனங்கள் நமது உடலின் செயல்பாட்டுக்கு எமனாக அமைந்து, பல நோய்களால் மரணத்தை ஏற்படுத்துகிறது.

ஆரோக்கியமான  உணவு (Healthy Food): நமது நா சுவைக்காக பல உணவுகளை விருப்பப்படி உண்டாலும், நமது இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையும் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், தானியங்கள், புரதம் & நார்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இறைச்சியில் மீனை சேர்க்கலாம். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்பு உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும். Sambar Masala: வீட்டிலேயே நாவை அசையும் சாம்பார் மசாலாவை அரைப்பது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.! 

உடற்பயிற்சி அவசியம் (Exercise): நமது உடல் செயப்பாடுகளே இதய நோய்க்கு காரணமாகவும் தீர்வாகவும் அமைகின்றன. இதய நோய் ஏற்படாமல் தடுக்க உடற்பயிற்சி என்பது அவசியம். உடற்பயிற்சி செய்தால் இதய இறப்பு அபாயம் குறைகிறது என ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது. நாளொன்றுக்கு குறைந்தது 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

கண்ணயர்ந்து உறக்கம் (Sleeping): இன்றளவில் நல்ல ரூமுக்கம் என்பது கவனிக்கப்படாமல் இருக்கும் பிரச்சனையில் முதன்மையானதாக இருக்கிறது. முதலில் தனிமனிதனுக்கு போதுமான உறக்கம் இல்லாத பட்சத்தில் மாரடைப்பு, நீரிழிவு நோய், மனசோர்வு போன்றவை அதிகரிக்கும். இதனால் உறக்கம் பாதிப்பிற்குள்ளாகும் பட்சத்தில், அது சார்ந்த பிரச்சனைகளும் அதிகரிக்கும். இதய ஆரோக்கியத்திற்கு நல்ல உறக்கம் அவசியம்.

மன அழுத்தம் வேண்டாம் (Stress): வாழ்க்கையில் மன அழுத்தம் என்ற விஷயம் தவிர்க்க இயலாது என்றாலும், அதனை முடிந்தளவு விரைவில் சரிசெய்துகொள்ள வேண்டும். ஏனெனில் நாள்பட்ட மனஅழுத்தம் உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவையும் ஏற்படலாம். ஆகையால் மன அழுத்தத்தை முடிந்தளவு கட்டாயம் குறைக்க வேண்டும்.

இரத்த அழுத்தம் (Blood Pressure): உயர் இரத்த அழுத்த பிரச்சனை இதயநோயை வெகுவாக உயர்த்தும் காரணிகளில் முக்கியமானதாகும். இது இதயத்தின் தமனியில் இரத்த அழுத்தமாக இருக்கையில் சிறுநீரகம், மூளை, இதயம் போன்றவையும் பாதிப்புக்குள்ளாகும். அதனால் நமது இரத்த அழுத்த அளவுகள் கட்டுக்குள் உள்ளனவா? என்பதை கட்டாயம் சோதனை செய்துகொள்ள வேண்டும்.

கேடான கொழுப்புகள் (Fats): நமது உடலில் தங்கியிருந்து, அதற்கு கேட்டினை ஏற்படுத்தும் தேவையற்ற கொழுப்புகள், இரத்த சர்க்கரை அளவுகள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆகையால் உடலில் இருக்கும் கேடான கொழுப்புகளை வெளியேற்ற உடற்பயிற்சி செய்வது அவசியம். அதனை வெளியேற்றும் காய்கறிகள், பழங்களை சாப்பிட வேண்டும்.

உடல் எடை (Weight): அதிகளவிலான உடல் எடை என்பது இதய நோய் பாதிப்பினை அதிகரிக்கிறது. உடல் பருமனால் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை பாதிப்பு மற்றும் அது சார்ந்த பிற பிரச்சனைகள் ஏற்படும். ஆதலால் உடல் எடையினை குறைப்பது நமது உடலுக்கும், இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 7,2022 03:35 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).