Neem Brush: பற்களில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.. வேப்பங்குச்சி இருக்க கவலையேன்?..!

பற்கள் உறுதியாக இருக்க ஆலும், வேலும் உதவியது. நமது பற்களை எழும்பு போல வலுவாக மாற்ற வேப்பங்குச்சியை பயன்படுத்தலாம்.

File Image: Neem Leaf

டிசம்பர், 7: பற்களின் ஈறு வீக்கம், பற்கள் ஆடுதல், பற்களில் (Teeth Problems) உள்ள சொத்தை, வாயில் துர்நாற்றம் உட்பட பல பிரச்சனைகளுக்கு நமது முன்னோர்கள் உபயோகம் செய்தது வேப்பங்குச்சி (Neem Brush) தான். அதனாலேயே அவர்கள் வயது மூப்பை சந்தித்தாலும் பற்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பதில் இருந்து விலகி இருந்தார்கள்.

நாகரீக மாற்றம்: இன்று நாகரீகம் என்ற பெயரில் நமது மரபுவழி இயற்கை மருத்துவ பொருட்களை நாம் மறந்து வருவதால், உடல்நலம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறோம். அதில், காலமாற்றம் என்பதற்கேற்ப பல்துலக்க வேப்பங்குச்சியை பயன்படுத்தியதை தவிர்த்துவிட்டு ஆயுர்வேத மூலிகைகள் கலக்கப்பட்ட பேஸ்டுகளை தேடி வருகிறோம்.

நமது பழமொழியில் ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பது உண்டு. பற்கள் உறுதியாக இருக்க ஆலும், வேலும் உதவியது. நமது பற்களை எழும்பு போல வலுவாக மாற்ற வேப்பங்குச்சியை பயன்படுத்தலாம். வேப்பங்குச்சியில் இருக்கும் நன்மைகள் குறித்து இன்று காணலாம். Block Spam Call: எப்போதும் உங்களுக்கு Spam Call அழைப்புகளாக வருகிறதா?.. ஒரே நிமிடத்தில் அதனை தடுப்பது எப்படி?..! 

வேப்பங்குச்சியின் அசத்தல் நன்மைகள்:  வேப்பிலை மரத்தின் சிறுகிளையை உடைத்து, அதனை துண்டாக்கி நுனியை பிரஸ் போல தயாரித்து உபயோகம் செய்தால் பிரஸ் மற்றும் பேஸ்ட்டாக வேப்பங்குச்சியே இருக்கும். இதனை நமது வாயில் வைத்ததும் உமிழ்நீர் சுரந்து, கிருமிகளை விரட்டும் கிருமி நாசினியாக செயல்பட தொடங்கியுள்ளது.

வேப்பங்குச்சியை பற்களுக்கு இடையே மேலும், கீழுமாக மெல்ல சுத்தப்படும் பட்சத்தில் பற்கள் வலுப்பெறும். இதன் கசப்புத்தன்மையால் கிருமிகள் விரைந்து மரணிக்கும். கசப்பு சாறு உடலில் பிற நோய்கள் பரவாமல் தடுக்கிறது.

சிலர் உணவில் கசப்புத்தன்மையை சேர்க்காத நபர்கள், தினமும் வேப்பங்குச்சியால் பற்களை துலக்கலாம். வேப்பங்குச்சியை மென்மையாக பயன்படுத்தும் நேரத்தில் பற்களின் இடுக்குகளில் மறைந்திருக்கும் கிருமிகள் அழியும். பற்களின் ஆட்டம், சொத்தை ஏற்படாது.

வாயில் பற்களுக்கு இடையே தாங்கும் அழுக்களால் ஈறுகளில் வீக்கம், இரத்தக்கசிவு, துர்நாற்றம் போன்றவை ஏற்படலாம். இதனை சரி செய்ய வேப்பங்குச்சியை வைத்து பற்களை துலக்க வேண்டும். வேப்பங்குச்சியை பயன்படுத்த கடினமாக இருக்கும் பட்சத்தில், அதனை காயவைத்து பொடியாக்கியும் பயன்படுத்தலாம்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 7,2022 11:08 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).