Junk Foods: அச்சச்சோ.. உங்களின் குழந்தை அதிகளவு ஜங்க் புட் சாப்பிடுகிறீர்களா?.. அதிகரிக்கும் மறதி நோய்; எச்சரிக்கை உங்களுக்குத்தான்..!

இது ஆவியில் வேகவைத்து, எண்ணெயில் பொரித்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.

Template: Baby Eating Junk Food Memory Loss

டிசம்பர், 8: இன்றளவில் குழந்தைகள் அதிகளவு நொறுக்குத்தீனிகள் (Junk Foods) என்று அழைக்கப்படும் செயற்கையான உனவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். இவ்வாறான ஜங்க் பூட்ஸ் மூன்று வேளை உணவுகளை குழந்தைகளிடையே மறக்கடித்து அதனையே சாப்பிட தூண்டுகிறது. இது ஆவியில் வேகவைத்து, எண்ணெயில் பொரித்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.

ரசாயனங்கள் நிறைந்தது (More Chemicals): இந்த வகையான நொறுக்குத்தீனிகள் ஒருபுறம் இருந்தால், உணவகங்களில் விதவிதமான பெயர்களில் சுவைக்காக பல இரசாயனம் சேர்த்து அவசர கதியில் ஆரோக்கியமில்லாத வகையில் இறைச்சி போன்ற உணவுகளை சமைத்து கொடுக்கிறார்கள். நூடுல்ஸ், பீட்சா, பிரைடு ரைஸ் என நொடியில் தயார் செய்யப்படும் உணவுகள் முதல் சிப்ஸ் வரை உள்ள அனைத்தும் உடலுக்கு பல கேடுகளை தருகிறது. இவ்வாறான ஜங்க் புட் காரணமாக உடலுக்கு ஏற்படும் தீமைகள் என்னென்ன என்பதை விரிவாக காணலாம்.

குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு (Children's Affect): துரித & நொறுக்குத்தீனிகளை (Fast Foods) குழந்தைகள் அதிகளவு சாப்பிடுவதால் மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்படும். இதனால் பதற்றம், மன அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சனை ஏற்படும். மேலும், கொழுப்புசத்துக்களை உடலில் தங்கவைத்து பிற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கு மறதி, கற்றல் குறைபாடு, விழிப்பு நிலையில் ஏற்படும் குறைபாடு, உணர்திறன் மந்தம் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. Muttai Curry: நீங்கள் எதிர்பார்க்கும் சுவையான முட்டை குழம்பு செய்வது எப்படி?.. நாவை சுவையாக்க அசத்தல் டிப்ஸ் இதோ.! 

நரம்பியல் கோளாறுகள் (Nerve System Problem): இந்த விஷயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, ஜங்க் புட் வகை உணவுகளை சாப்பிடும் குழந்தைகளுக்கு அறிவு மழுங்குதல், மறதி போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இனிப்பு வகைகள் பல வியாதிகளுக்கு வழிவகை செய்கிறது. இதனால் நரம்பியல் கோளாறும் ஏற்படுகின்றன. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு இருக்கும் தின்பண்டம், இனிப்பு, செயற்கை பழச்சாறுகள் போன்றவையும் தவிர்க்க வேண்டும்.

உணவில் விஷம் (Poisonous Food): உணவு தயாரிப்பு தொழிற்சாலையில் வறுக்கப்பட்ட, சுவைக்காக செயற்கை இரசாயனம், பொருட்கள், சாயமேற்றிகள் சேர்க்கப்படும் உணவுகள் உடலுக்கு பேராபத்துகளை வழிவகுக்கும். அதனைப்போல, அவர்கள் உணவுகளை வறுக்க பயன்படுத்தும் பொருட்கள் நச்சுத்தன்மை கொண்டவை ஆகும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மூலமாகவும் உடலின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. ஆகையால், குழந்தைகளுக்கு சிறு வயது முதலாகவே அவர்களின் ஆரோக்கியம் குறித்த புரியலையும் ஏற்படுத்தி ஜங்க் புட் பழக்கத்தில் இருந்த விலக்கி வைப்பது நல்லது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 8, 2022 08:55 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).