Causes of Skin Wrinkles: அச்சச்சோ.. இந்த வகை உணவுகளை அதிகம் சாப்பிடுறீங்களா?; விரைவில் முதுமை, தோல் சுருக்கம் ஏற்படுமாம்..!

துரித உணவுகள் இரத்த ஓட்டத்தை நிலைகுலைய செய்கிறது. துரித உணவுகளால் ஏற்படும் பெரும் பாதிப்புகள் குறித்த தகவலை இன்று தெரிந்துகொள்ளுங்கள்.

Aged Women Face (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 08, சென்னை (Health Tips): இன்றளவில் நாம் வயதுக்கும்-தோற்றத்திற்கும் சம்பந்தம் இல்லாத மனிதர்களை சந்தித்து வருகிறோம். மிக இளம்வயதில் தலைமுடி நரைத்தல், தோல் சுருக்கம் போன்ற பிரச்சனையை எதிர்கொள்வது, முதுமையை பெறுவது என பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

இப்பிரச்சினைகள் இன்றளவில் இருக்கும் இளம் தலைமுறையில் ஆண், பெண்ணுக்கு அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அதிகளவு தென்படுகிறது. இவற்றுக்கு முக்கிய காரணமாக தவறிய உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறைகள் காரணமாக அமைகின்றன.

துரித உணவு கலாச்சாரம் என்பது இந்தியாவில் கடுமையான மறைமுக தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலைநாட்டு உணவு பழக்கவழக்கமும் இதில் இணைந்துகொள்கிறது. ஆரோக்கியம் இல்லாத உணவுகளை பலரும் விரும்பி அதிகளவு தொடர்ந்து சாப்பிடுவதால் உடல், இளமையை இழந்து தவித்து வருகின்றனர். Chandrayan 3 Update: நிலவு வட்டப்பாதைக்குள் நுழைந்தது சந்திராயன்; நிலவின் அசத்தல் தோற்றம் இதோ.! வீடியோ உள்ளே.!

இளம்வயதில் முதுமையை ஏற்படுத்தும் செயற்கை குளிர்பானம் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.. இவை சிறிதளவு குடித்தாலும், அதன் பாதிப்பு என்பது உறுதி. செயற்கை குளிர்பானத்தை தொடர்ந்து குடித்தால் உடலில் இருக்கும் நீர் வற்றி, சருமம் பாதிக்கப்பட்டு அடுத்தகட்ட பிரச்சனையை ஏற்படுத்தும். அதாவது வயோதிக தோற்றம் உண்டாகும்.

நமது உடலின் இரத்த ஓட்டம் சீராக இருப்பதால், நமது தோல் பளபளப்புடன் காணப்படுகிறது. துரித உணவுகள் இரத்த ஓட்டத்தை நிலைகுலைய செய்கிறது. இதனால் துரித உணவுகள், பீட்சா, பர்கர் போன்ற கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிட கூடாது.

இறைச்சியை அளவுக்கு அதிஅக்மக உட்கொள்வதால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் குவிந்து நச்சுக்களாக மாறுகிறது. இதனால் வைட்டமின் டி சத்து கேள்விக்குறியாகி உடலை முதுமை நிலையை அடைய செய்யும்.

"உப்பில்லாத பண்டம் குப்பையில்" என்பது நம்மூர் மக்களின் பேச்சு வழக்கு என்றாலும், அதிக உப்பு இரத்த அழுத்தத்தினை உருவாக்கும். இதனால் தோலின் இறுக்கம் சுருங்கி வயோதிக தோற்றம் ஏற்படும். மதுபானம் அருந்துவோருக்கு இயல்பாகவே உடலில் நீர் இழப்பு ஏற்படும் என்பதால், அவர்களும் வயோதிக தோற்றத்தை பெறுவார்கள்.