Body Pain Health Advice: உங்களின் உடலில் தினமும் இவ்வுளவு வலிகள் தெரிகிறதா?.. மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கலாம்.. உஷார்.!
மூட்டு பகுதியில் காயம், வீக்கம் போன்றவற்றால் மூட்டுவலி ஏற்படும். வைட்டமின் டி குறைபாடு கொண்டவர்களுக்கு தசைப்பகுதியில் வலி ஏற்படும். அடிக்கடி ஏற்படும் ஒற்றைத்தலைவலி கவனிக்கப்படவேண்டிய ஒன்று ஆகும்.
ஆகஸ்ட் 24, சென்னை (Health Tips): உடல் வலி பலருக்கும் பொதுவான பிரச்சனை ஆகும். சில நேரத்தில் கடுமையான உடல்வலி நம்மை வாட்டி வதைக்கும். இதற்கு காரணமாக காய்ச்சல், அதிக பளு தூக்குதல் போன்றவை காரணமாக இருக்கும். ஆனால், அடிக்கடி உடல்வலி ஏற்படுவது சாதாரணமானது இல்லை. கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டிய பிரச்சனை ஆகும்.
அவ்வப்போது ஏற்படும் வலி பைப்ரோமையல்ஜியா என்ற தசைநார் வழியாகவும் இருக்கலாம். இதனால் சோர்வு, தூக்கம் நினைவாற்றல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னையும் ஏற்படலாம். வலி, சோர்வு, அறிவாற்றல் சிரமம், ஒற்றைத்தலைவலி போன்றவையும் இருக்கலாம்.
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் காரணமாகவும் சிலநேரம் தசைநார் வலி இருக்கும். தசைநார் நோயினால் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகம் பாதிக்கப்டுகிறார்கள். இந்நோய் எதற்காக ஏற்படுகிறது என்பது கண்டறியப்படவில்லை என்றாலும், மார்பு ரீதியாக நோய் ஏற்படும் பட்சத்தில் கடுமையான பாதிப்பு இருக்கும்.
எப்போதாவது ஏற்படும் உடல்வலி பிரச்சனை இல்லை என்றாலும், அடிக்கடி ஏற்படும் உடல் வலி குறித்து மருத்துவரை சந்திப்பது நல்லது. இந்த தொடர் வழிகள் நமக்கு அசௌகரியத்தை தந்து, அன்றாட வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும். இவை சிலநேரம் பெரிய நோய்களின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். Landslide Shocking Video: சீட்டுக்கட்டுகள் போல் சரிந்த கட்டிடம்; நிலச்சரிவில் சிக்கி சின்னாபின்னமாக பகீர் வீடியோ உள்ளே.!
கீல்வாதம், முடக்கு வாதம், வயிற்று புண்கள், புற்றுநோய், பித்தப்பை பிரச்சனை போன்ற வலிகளும் இவ்வாறே தொடக்கத்தில் இருக்கும். சரியாக கவனிக்காத பட்சத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும். நமக்கு நெஞ்சுவலி இருக்கும் பட்சத்தில், அது உயிருக்கு ஆபத்தான அறிகுறி ஆகும்.
இதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை சந்திக்க வேண்டும். மூட்டு பகுதியில் காயம், வீக்கம் போன்றவற்றால் மூட்டுவலி ஏற்படும். வைட்டமின் டி குறைபாடு கொண்டவர்களுக்கு தசைப்பகுதியில் வலி ஏற்படும். அடிக்கடி ஏற்படும் ஒற்றைத்தலைவலி கவனிக்கப்படவேண்டிய ஒன்று ஆகும்.
தூக்கமின்மை, மனரீதியான அழுத்தம் போன்றவையும் தலைவலிக்கு வழிவகை செய்யும். பெண்களுக்கு மாதவிடாய் நாட்களிலும், இரும்புசத்து குறைவாக உள்ள பெண்களுக்கும் தலைவலி ஏற்படும். இரைப்பை குடல் பிரச்சனை, சிறுநீர் பாதை தொற்று, இனப்பெருக்க மண்டல பிரச்சனையால் வயிற்று வலி ஏற்படும். அல்சர், செரிமான கோளாறுகளினாலும் ஏற்படலாம். Prigozhin Dead in Plane Crash: வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பயணித்த விமானம் விபத்துக்குளானது-ரஷ்யா அறிவிப்பு.!
5 மணிநேரத்திற்கு அதிகமாக ஒரே இடத்தில் அமர்ந்து இருத்தல் மரப்புதன்மை பிரச்சனையை தரும். தோள்பட்டையும் பாதிக்கப்படலாம். இவ்வாறானவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும், ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வலி தொடரும் பட்சத்தில் கீல்வாதம், எலும்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.
தசைகளில் ஏற்படும் இறுக்கம், ஆழமான நரம்பு இரத்த உறைவு உட்பட பல காரணத்தால் கால்வலி ஏற்படும். கால்வலி கடுமையாக திடீரென ஏற்பட்டால் இரத்த உறவிவு அல்லது நரம்பு சேதத்தை அறிகுறியாக இருக்கலாம். எவ்வகை வழியாக இருந்தாலும், அவற்றுக்கு குடும்ப மருத்துவரை அணுகி, ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து சுதாரிப்புடன் வாழுவதே சாலச்சிறந்தது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)