Red Banana Benefits: ஆண்மைக்குறைவு, நரம்புத்தளர்ச்சி, கண் பிரச்சனைகளுக்கு அசத்தல் தீர்வு: செவ்வாழையில் இருக்கும் வியக்கவைக்கும் நன்மைகள் இதோ.!

சிரங்கு பிரச்சனைக்கு மருந்து போடாத பட்சத்திலும், செவ்வாழை சாப்பிட்டாலே போதுமானது.

Red Banana (Photo Credit: Amazon.com)

செப்டம்பர் 24, சென்னை (Health Tips): இந்தியாவில் உள்ள பிரதான மக்களின் விருப்ப பழங்களில் ஒன்றாக இருக்கும் வாழைப்பழத்தில், நாட்டு வாழை, கற்பூர வாழை, செவ்வாழை (Red Banana Benefits), நேந்திரம் வாழை, பச்சை வாழை, ரஸ்தாளி என பல வகைகள் கிடைக்கின்றன.

இவற்றில் ஒவ்வொரு வாழ்க்கைக்கும் ஒவ்வொரு சத்துக்கள் என அதன் பண்புகள் வித்தியாசப்படும். இவற்றில் செவ்வாழை மிகமுக்கிய இடத்தினை பெறுகிறது. இன்று 48 நாட்களுக்கு தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.

செவ்வாழையை ஒரு மண்டலம் என்ற கணக்கில் எடுத்துக்கொள்ள, நமது உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டவர்களுக்கு செவ்வாழை நல்ல மருந்தாக கிடைக்கிறது. நரம்புதளர்ச்சியினால் உடல் பலம் குறையும். ஆண்மை குறைபாடும் ஏற்படும்.

இதனால் நரம்புத்தளர்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டோர், 48 நாட்களுக்கு செவ்வாழை தொடர்ந்து சாப்பிட்டு வர நரம்பு பலமாகும். மாலைக்கண் நோய் தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்வோர், செவ்வாழையை தினமும் சாப்பிட்டு வர பார்வை தெளிவாகும். Women IND Vs BAN: இன்று மாலை தொடங்குகிறது இந்தியா Vs வங்காளதேசம் பெண்கள் கிரிக்கெட் போட்டி; நேரலையில் பார்ப்பது எப்படி?.. விபரம் இதோ.! 

பல்லசைவு, பல்வலி போன்ற பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு செவ்வாழை தீர்வாக அமையும். 21 நாட்களுக்கு தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வர, பற்கள் சார்ந்த பிரச்சனை நீங்கும்.

சொறி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற சருமம் தொடர்பான வியாதிகளுக்கும் செவ்வாழை நிவாரணியாக இருக்கும். சிரங்கு பிரச்சனைக்கு மருந்து போடாத பட்சத்திலும், செவ்வாழை சாப்பிட்டாலே போதுமானது.

நாட்பட்ட உடல் கழிவுகளையும் செவ்வாழை வயிற்றில் இருந்து வெளியேற்றும். உடலுக்கு பல நன்மைகளை தரும் செவ்வாழையை காலை எழுந்ததம் பல் துலக்கிவிட்டு சாப்பிடலாம். இரவு உணவுக்கு முன்பு எடுத்துக்கொள்ளலாம்.

ஏனெனில் உணவு சாப்பிட்டு பிற வாழைப்பழங்களை போல செவ்வாழையை சாப்பிடுவது அதன் சத்துக்கள் கிடைக்க வழிவகை செய்யாது. அதேபோல, மந்தமான உணர்வை ஏற்படுத்தும்.