Pesticides Caution: அச்சச்சோ... பூச்சிக்கொல்லி எச்சங்கள் கலந்த காய்கறி, பழங்களால் கர்ப்பகால பேராபத்து.. உயிருக்கு உலைவைக்கும் கொல்லிகள்.!

இதனால் நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படும்.

Template: Pregnancy Tips

டிசம்பர், 7: நமது உடலினை ஆரோக்கியமாக பாதுகாக்க காய்கறிகள், பழங்கள் (Fruits & Vegetables) போன்றவற்றை சாப்பிடுவது அவசியம். இதனால் நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படும். நாம் இன்றளவில் வைட்டமின், ஊட்டச்சத்துக்களை வழங்கும் காய்கறிகள், பழங்களை சாப்பிட்டாலும் அவற்றில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லியால் ஏற்படும் பாதிப்புகளையும் கவனிக்க வேண்டியுள்ளது.

பூச்சிக்கொல்லிகள் (Pesticides): காய்கறிகள், பழங்களை பூச்சி அரிக்காமல் தடுக்க உலகளவில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் (Pesticides) கருவுறுதல் பாதிப்பு ஏற்படும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். ஏனெனில் பூச்சிகளை கொல்ல பயன்படுத்தப்படும் மருந்துகளின் எச்சங்கள் நமது உணவு வழியே நம்மை பாதிக்கிறது. இதனால் இயற்கை பூச்சிக்கொல்லிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

இந்த விஷயம் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்துகொண்ட IVP கருவுறுதல் மற்றும் கருத்தரிப்பு நிபுணர் மருத்துவர் சந்தீப் தல்வார், அதிகளவிலான பூச்சிக்கொல்லியின் எச்சங்கள் உள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டால் விந்தணுக்களின் தரம் (Sperm Strength) மற்றும் கருவுறுதல் (Fertility) விகிதம் குறையும். பெண்களிடையே கருத்தரிக்கும், குழந்தை பிறகும் வாய்ப்பை குறைக்கும். Mobile Theft: உங்களின் செல்போன் திருடுபோய்விட்டதா?.. IMEI நம்பர் கொண்டு பிளாக் செய்வது எப்படி?..! 

ஆண்-பெண்களுக்கு பாதிப்பு: இதனைப்போல, ஆண்களுக்கு விந்தணுவின் தரத்தை குறைத்து தம்பதிகள் குழந்தை பெறுதலை தள்ளிப்போடும். இதனால் கர்ப்பம் தரிக்கவுள்ள அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபடும் தம்பதிகள் மெருகேற்றப்பட்ட, பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகளவு உபயோகித்த ஆப்பிள், ஸ்ட்ராபெரி, பழங்கள், காய்கறிகளை வாங்காமல் தவிர்ப்பது நல்லது.

நாம் சாப்பிடும் உணவுகளில் கலந்துள்ள பூச்சிக்கொல்லியால் கருவுறுதல் விகிதம் குறைதல், கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், முன்னதாகவே குழந்தை பிறத்தல், குறைந்த எடையில் குழந்தை பிறப்பது, கர்ப்பப்பை கோளாறு, டி.என்.ஏ மாற்றங்கள், செல்களின் கட்டமைப்பில் நேரடி சேதம், பிறப்பு குறைபாடு போன்றவையும் ஏற்படுகின்றன.

இந்த விஷயம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருக்கும் ஸ்ட்ராபெரி, கீரை, திராட்சை, ஆப்பிள் போன்றவற்றை அதிகளவில் சாப்பிடும் பெண்கள் கருவுறும் விகிதம் 18 % குறைந்துள்ளது. குழந்தை (Baby) உயிருடன் பிறக்கும் வாய்ப்பு 26 % குறைந்துள்ளது. ஆண்களின் விந்தணுக்கள் தரம் குறைகிறது.

இயற்கையே சிறந்தது (Nature is Good): இயற்கை முறையிலான விவசாயத்தில், இயற்கை பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டு கிடைத்த பொருட்களால் எவ்வித பிரச்சனையும் இல்லை. அதே வேளையில் கடைகளில் இருந்து வாங்கும் பொருட்களை கட்டாயம் நீரில் நன்கு கழுவிய பின்பே சமைக்கவோ, சாப்பிடவோ செய்ய வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 7,2022 11:01 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).