TTD Vaikunta Ekadasi 2025 Tickets: வைகுண்ட துவார ஏகாதசி 2025.. திருமலை தரிசனத்திற்கான முன்பதிவு தொடக்கம்..!

திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் வைகுண்ட துவார தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Tirupati (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 24, திருமலை (Festival News): ஆந்திர பிரதேச மாநிலம், திருமலையில் (Tirumala) உள்ள வைகுண்ட ஏகாதசி (Vaikunta Ekadasi) திருமலை கோவிலில் 2025ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும், கருவறையைச் சுற்றியுள்ள உள்பாதையான வைகுண்ட துவாரம் ஜனவரி 10 முதல் ஜனவரி 19 வரை பக்தர்களுக்காக திறந்திருக்கும். இதற்கு செல்லுபடியாகும் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இருப்பினும், டோக்கன் இல்லாத நபர்கள் கோயில் நகரத்திற்குச் செல்லலாம். ஆனால், தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். Astrology: 2025 ஆம் ஆண்டு அவிட்டம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

தரிசன டிக்கெட் முன்பதிவு:

திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் (Lord Venkateswara Temple)வைகுண்ட துவார தரிசனத்திற்கான (Vaikunta Dwara Darshan) ஆன்லைன் டிக்கெட்டுகளை (Online Tickets Booking) நேற்று (டிசம்பர் 23) காலை 11 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என்றும், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம் (SED) டிக்கெட்டுகள் கிடைக்கும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இன்று (டிசம்பர் 24) காலை 11 மணி முதல் ஆன்லைனில், சாதாரண பக்தர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஸ்லாட்டட் சர்வ தர்ஷன் (SSD) டோக்கன்கள், திருமலையில் உள்ள கவுஸ்துபம் விருந்தினர் மாளிகையிலும், திருப்பதியில் உள்ள நியமிக்கப்பட்ட 8 கவுண்டர்களிலும் கிடைக்கும்.

சிறப்பு தரிசனம்: