Brain Rot: தினமும் அதிகமாக போன் பார்க்கிறீங்களா? அப்போ உங்களுக்கு 'மூளை அழுகல்' ஆபத்து.., முழு விவரம் உள்ளே..!
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், 2024ஆம் ஆண்டுக்கான வார்த்தையாக மூளை அழுகலை தேர்ந்தெடுத்துள்ளது.
டிசம்பர் 03, சென்னை (Health Tips): இன்றைய நவீன உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இணையதளம், கணினி பயன்பாடு மற்றும் நீண்ட நேரம் மொபைலில் வீடியோக்களை பார்க்கும் பழக்கம் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்குத் தொடர்புடைய வார்த்தையைத்தான் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் (Oxford University), 2024-ஆம் ஆண்டுக்கான Word of the Year ஆகத் தேர்ந்தெடுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் அதிகளவில் புழங்கும் சொற்கள் தொடர்ந்து அந்த ஆண்டுக்கான வார்த்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2023ஆம் ஆண்டு Rizz, அதற்கு முந்தைய ஆண்டு Goblin Mode போன்ற சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்த 2024ஆம் ஆண்டு Brain rot என்ற சொல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. Winter Breathing Problems: பனிக்காலத்தில் சுவாசப்பாதை தொற்று வராமல் இருக்க இதை பண்ணுங்க... விபரம் உள்ளே..!
மூளை அழுகல்:
மூளை அழுகல் (Brain Rot) என்பது மூளையின் சிதைவு ஆகும். ஒருவரின் மன அல்லது அறிவுசார் நிலை மோசமாதலைக் குறிக்கிறது. ஆன்லைனில் நீண்ட நேரம் எவ்வித நோக்கமும் இல்லாத வீடியோக்களை பார்ப்பதை தொடர்புப்படுத்துகின்றனர். இது அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் குறைபாடு, பிற நரம்பியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. மூளை அழுகல் ஏன் ஏற்படுகிறது என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மேலும் மோசமான வாழ்க்கை முறைகள், குறிப்பாக புகைபிடித்தல், அதிகமாக மது அருந்துதல், உடற்பயிற்சி மற்றும் தூக்கமின்மை போன்றவைகள் அடங்கும். இறுதியாக சொல்லப்போனால், உங்கள் மூளையைச் சீரழிவு நிலைக்குக் கொண்டுசெல்லும் எதையும் இந்த வார்த்தையுடன் தொடர்புப்படுத்தலாம்.
அமெரிக்கத் தத்துவவியலாளர் ஹென்றி டேவிட் தோரோ (American Philosopher Henry David Thoreau) என்பவரால், கடந்த 1854ஆம் ஆண்டு 'Brain rot' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய ஆன்லைன் உலகில் அது வேறுவிதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. 2023-24 ஆகிய ஆண்டுகளில் இந்த வார்த்தையின் பயன்பாடு 230 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தெரிவிக்கின்றது. குறிப்பாக, ஆன்லைனில் அதிகநேரம் வீடியோக்கள் பார்ப்பதனால் ஏற்படும் தீங்குகளைப் பற்றி பேசுவதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. மெய்நிகர் வாழ்க்கையின் (Virtual Life) ஆபத்தை விளக்கும் வார்த்தையாக Brain rot இருக்கிறது. நாம் நமது நேரத்தை எவ்வளவு வீணாகச் செலவழிக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்த இந்த வார்த்தை பயன்படுகிறது எனக் கூறியுள்ளார்.
ஆக்ஸ்ஃபோர்ட் 2024ஆம் ஆண்டுக்கான வார்த்தையாக தேர்ந்தெடுக்க பரிசீலிக்கப்பட்ட பிற வார்த்தைகள்:
Lore: அறிவுசார்ந்ததாக கருதப்படும் உண்மைகள், பின்னணி தகவல்கள் மற்றும் வாய்மொழிக் கதைகளை குறிப்பிடுவது.
Dynamic Pricing: சந்தை நிலைமையைப் பொருத்து விலை மதிப்பு மாறுபடுதல். குறிப்பாக, தேவை அதிகரிக்கும் நேரத்தில் விலை அதிகரித்தல்.
Demure: உடல் தோற்றத்தில் அல்லது பண்பில் அடக்கமான அல்லது கட்டுப்பாடான நபரை குறிப்பிடுவது.
Romantasy: ரொமான்ஸ் மற்றும் ஃபேண்டஸி கலந்து உருவாக்கப்படும் கதைகள்.
Slop: ஆன்லைனில் பகிரப்படும், ஏஐ தொழில்நுட்பத்துடன் உருவான எழுத்து, ஓவியம் மற்றும் பிற கலை வடிவங்கள் மோசமானதாக அல்ல துல்லியமற்றதாக இருந்தால் அவற்றைக் குறிப்பிடப் பயன்படுத்தும் வார்த்தை ஆகும்.
2024ஆம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு வார்த்தையாக 'மூளை அழுகல்' தேர்வு:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)