Summer Season Avoid Foods: கோடை காலத்தில் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகள் எவை?.. மக்களே தப்பி தவறியும் சாப்பிட்டுடாதீங்க.!

பல உணவுகள் உடல் நீரிழப்புக்கு வழிவகை செய்யும். அவ்வறவற்றை நாம் அறியாமையில் தேடி சாப்பிட்டால், அவை எதிர்மறையான விளைவை உண்டாக்கி உடல் உபாதைக்கு வழிவகை செய்யும்.

Young Women Avoid Food | Summer Season File Pic (Photo Credit: Freepik / Wikipedia)

மே 22 , சென்னை (Health Tips): நாம் கோடையில் ஏற்படும் வெப்பநிலையை சமாளிக்க, நமது உணவு விசயத்தில் கட்டுப்பாடு என்பது அவசியமான ஒன்று என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இன்றளவில் பல உணவுகள் உடல் நீரிழப்புக்கு வழிவகை செய்யும். அவ்வறவற்றை நாம் அறியாமையில் தேடி சாப்பிட்டால், அவை எதிர்மறையான விளைவை உண்டாக்கி உடல் உபாதைக்கு வழிவகை செய்யும். இன்று கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து காணலாம். இவை உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும்.

காபி: உடலின் நீரிழப்புக்கு வழிவகை செய்து, உடல் வெப்பத்தை அதிகரிக்க காபி முதல் காரணமாக அமைகிறது. இதனால் காபி பிரியர்கள் கோடையில் அதனை குறைக்கலாம் அல்லது காபி பருகுவதை தவிர்க்கலாம்.

ஊறுகாய்: நம்மில் பலருக்கும் ஊறுகாய் என்றால் கொள்ளை பிரியம். சிலர் வெறும் வாயில் சாப்பிடுவார்கள். சோடியம் கலந்துள்ள ஊறுகாய் நீரிழிவை ஏற்படுத்தும். இதனை கோடையில் அதிகம் சாப்பிட்டால் அஜீரண பிரச்சனை மேலோங்கும். வீட்டில் தயாரிக்கப்படும் ஊறுகாயாக இருந்தாலும், கோடையில் அதனை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.

உலர்பழங்கள்: நமது உடலில் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க உலர்பழங்கள் முக்கியமானவை என்றாலும், கோடையில் இவற்றின் பயன்பாடுகளை குறைப்பது நல்லது. இவை உடலின் வெப்பநிலையை அதிகரிக்க உதவி செய்யும். Virat fans Against Shubman Gill: கீழ்த்தரமான எண்ணம் கொண்ட பெங்களூர் அணியின் ரசிகர்கள்.. ஷுப்னம் ஹில்லின் அதிரடிக்கு எதிராக அவதூறு.!

செயற்கை பானங்கள்: இன்றளவில் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் செயற்கை ரசாயன பானங்களை கோடையின் தாக்கத்தில் இருந்து விடுபட வாங்கி பருக தொடங்கிவிட்டோம். இவற்றில் இருக்கும் சர்க்கரை நீரழிப்பை ஏற்படுத்தும். பால் சேர்க்கப்பட்ட மில்க் ஷேக் போன்றவையும் இதில் அடங்கும். இவற்றில் இருக்கும் கலோரிகள் உடலுக்கு ஆரோக்கியம் கிடையாது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் உபாதை, உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்தும்.

காரசாரமான & பொரித்த உணவுகள்: கோடையின் வெப்பம் அதிகரிக்கும் காலத்தில், காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். காரத்தில் உள்ள கேப்சைசின் சேர்மம் கோடையில் நல்லதல்ல. இவை நீரிழப்பு, உடல் சூடு, அஜீரணம் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும். பஜ்ஜி, வடை, சமோசா உட்பட பல எண்ணெய் உணவுகளும் நீரிழப்புக்கு வழிவகை செய்யும். இவை எளிதில் செரிமானம் ஆகாது.

மதுவகை & உப்பு உணவுகள்: கோடை காலத்தில் 5% ஆல்கஹால் பீர் வகை மதுபானமும் சரி, 30% ஆல்கஹால் சாராய வகை மதுபானம் சரி அனைத்தும் உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். குளிர்ந்த பீர் குடித்தால் முதலில் உடல் சூடு அடங்குவது போல தோன்றினாலும், அதன் மாயை சிலமணிநேரம் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மதுபானம் கோடையில் அருந்தினால் நீரிழப்பு ஏற்படும். தொண்டை வறட்சி, தலைவலி போன்றவையும் உண்டாகும். உப்பு உடலில் இருக்கும் நீரை உறிஞ்சிவிடும் என்பதால் அதிகப்படியான உப்பு சேர்ந்து உணவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.