Puthandu Vazthukal 2024: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.. நீங்கள் விரும்பும் புத்தாண்டு வாழ்த்துக்கள் இதோ.!

தமிழர்களின் வாழ்வியலில் ஒன்றிப்போன பண்டிகை கொண்டாட்டத்தில் முக்கியமானதாக கருதப்படும் வருடப்பிறப்பில், நமது வாழ்த்துக்கள் நண்பர்கள், உறவினர்களின் மனமகிழ்ச்சிக்கும், ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கவும் உதவும்.

Tamil New Year Wish 2024 (Photo Credit: LatestLY)

Tamil New Year 2024 Images & Puthandu Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Varusha Pirappu: சென்னை (Chennai): ஒவ்வொரு ஆண்டும் சித்திரை (Chithirai New Year) மாதம் முதல் நாள் (ஆங்கில நாள்காட்டிப்படி ஏப்ரல் 14, 2024) உலகெங்கும் உள்ள தமிழர்களால், தமிழ் புத்தாண்டு சிறப்பிக்கப்படுகிறது. சாஸ்திரப்படி, சூரிய நாட்காட்டியின் வழிமுறையில், மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும்போது தமிழ் புத்தாண்டு (Tamil New Year 2024) தொடங்குகிறது. சித்திரை மாதத்தில் தொடங்கும் புத்தாண்டு, பங்குனியில் நிறைவாகிறது. புத்தாண்டன்று தமிழர்களில் தங்களின் வீடுகளை மாவிலை தோரணத்துடன் அலங்காரம் செய்து, வீட்டில் மா, பலா மற்றும் வாழையுடன் தெய்வங்களுக்கு உணவு சமைத்து வழிபாடு செய்வார்கள்.

வாசிகர்களுக்காக சிறப்பு வாழ்த்துக்கள்: 2024ம் ஆண்டு புத்தாண்டில் (Tamil Puthandu 2024) காலை 07:30 மணிமுதல் 08:30 மணிவரை சாமி கும்பிட நல்ல நேரம் கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்நாளில் ஏழை-எளியோருக்கு அன்னதானம் வழங்குவது, பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது, மஞ்சள், உப்பு, அரிசி, கற்கண்டு வாங்கி வீட்டில் வைப்பது நல்லது. இந்நன்னாளில் நாம் மனதார வாழ்த்தும் ஒவ்வொரு வார்த்தையும் நமது வெற்றிக்கு மட்டுமல்லாது, நமது நண்பர்கள், உறவினர்களின் வெற்றிக்கும் வழிவகை செய்யும். எமது லேட்டஸ்ட்லி (LatestLY Tamil) குழுமத்தால், உங்களுக்கான வாழ்த்துக்கள் குறித்த சிறப்பு செய்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் வாட்சப், பேஸ்புக் போன்றவற்றில் நேரடியாக ஸ்டேட்டஸ் பதிவாக இட்டு உங்களின் வாழ்த்துக்களை பகிரலாம். Puthandu Vazthukal 2024: தமிழர் புத்தாண்டு அன்று செய்ய வேண்டியது என்ன?.. 2024 தமிழ் புத்தாண்டு முழு விபரம் இதோ.! 

Tamil New Year Wish 2024 (Photo Credit: Pixabay)

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் இதோ:

 அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு நிறைந்த ஆண்டாக தமிழ் புத்தாண்டு அமைய, இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

 தமிழ் புத்தாண்டு புதிய வாய்ப்பு, முயற்சி அனைத்தையும் ஏற்படுத்திக்கொடுத்து வெற்றியைத்தர, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

 நம்பிக்கை, மகிழ்ச்சி, நேர்மறை நிறைந்த புதிய அத்தியாயம் இன்பமாய் உங்களுக்கு தொண்டாகட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

 உங்களின் மீதும், உங்களின் குடும்பத்தின் மீதும் இறைவனின் அருள் எப்போதும் இருக்கட்டும், இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள்!

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

 இருகரம் கூப்பி அன்புடன் புத்தாண்டை வரவேற்போம், புத்தாண்டின் புதிய தொடக்கத்தை மகிழ்ச்சியுடன், உற்சாகத்துடன் கொண்டாடுவோம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

 இந்த புதிய ஆண்டில் புதிய வாய்ப்பு, வெற்றி நிறைந்த ஆண்டை ஏற்படுத்த பிரார்த்தனை செய்வோம், தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

 தமிழ் புத்தாண்டில் புதிய இலக்கு, கனவுகள் நெருங்கட்டும், இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

 இதயம் நிறைந்த நன்றி, நல்ல நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்போம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

 நமது குடும்பத்திற்கு அன்பு, அமைதி, செழிப்பு ஆக்கியவற்றை புத்தாண்டு தரட்டும்.. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

 மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, வளமான புத்தாண்டை இன்முகத்துடன் வரவேற்போம், இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

 புத்தாண்டின் புதிய தொடக்கத்தை இருகரம் நீட்டி, அன்புடன் வரவேற்போம்.. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

 வாழ்வின் சூரிய ஒளியாக இருக்கும் துணையே, தமிழ் புத்தாண்டில் மேலும் நமது நெருக்கத்தை வலுப்படுத்தி, அன்பு, ஆதரவு, புரிதலை வெளிப்படுத்தி, உற்சாகமாக, வெற்றிகரமாக நமது நினைவுகளை உருவாக்குவோம், இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

 வாசகர்களாகிய நீங்கள் மென்மேலும் உங்களின் வாசிப்பை வளர்த்து, தொடர்ந்து ஆதரவை வழங்கிட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

இவ்வாழ்த்துக்களை உங்களின் நண்பர்களுக்கும் பகிர்ந்து, தமிழ் புத்தாண்டை சிறப்பிக்க எமது லேட்டஸ்ட் லி தமிழ் சார்பில் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif