Margazhi Month 2024: மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!

மகத்துவம் நிறைந்த மார்கழி மாதத்தின் சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

Margazhi Month 2024 (Photo Credit: Team LatestLY)

டிசம்பர் 16, சென்னை (Festival News): தமிழ் மாதங்களில் மிக முக்கிய மாதமாகவும், மோட்சத்தை தரும் மாதமாகவும், பாவங்கள் அனைத்தும் நீங்கி, இன்பமான வாழ்க்கையை பெறுவதற்கும், இறை வழிபாட்டிற்குரிய மிகச்சிறப்பான மாதங்களில் ஒன்று மார்கழி மாதம் (Margazhi Month). இந்த மாதத்தில் சிவ பெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம், பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசி, அனுமனின் திருஅவதார தினம் போன்றவை வருவதால் இது அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற மாதமாக கருதப்படுகிறது. தேவர்களுடைய விடியற்காலை என கருதப்படும் மார்கழி மாதம் வழிபாட்டிற்குரிய மாதமாகும். Astrology: 2025 ஆம் ஆண்டு விசாகம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

மார்கழி மாதம் 2024:

மகத்துவம் நிறைந்த மார்கழி மாதத்தில் இறைவனிடம் அவர் திருவடிச் சார்ந்த செயல்பாடுகளிலே மனம் இருக்க வேண்டும். மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதேநேரம் இறைவனிடம் மனம் நெருங்கி இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆண்டாள் இம்மாதம் முழுவதும் விரதம் இருந்துதான் பெருமாளை கணவனாக அடையும் பெருமையைப் பெற்றாள். இந்த மாதத்தில் சில குறிப்பிட்ட பயணங்களை மேற்கொள்வதால் சூரியனின் அருளையும், பொருளாதார பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான வழியையும் பெற முடியும்.

மார்கழி மாத சிறப்புகள்: