Loss of Hearing: உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் தென்படுகிறதா?.. காது கேளாமைக்கான அறிகுறியாக இருக்கலாம் உஷார்..!
ஆனால், இன்றோ அந்நிலை தலைகீழாக மாறி இளம் வயதின காது தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
டிசம்பர், 11: அன்றைய காலங்களில் 65 வயதை கடந்தவர்களுக்கு காது கேளாமை (Aged Persons Hearing Problem) பிரச்சனை என்பது பரவலாக இருந்து வந்தது. ஆனால், இன்றோ அந்நிலை தலைகீழாக மாறி இளம் வயதினர் (Youngsters Hearing Loss) காது தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். சிகிரெட்டில் உள்ள ரசாயனங்கள், தொழிற்சாலை இயந்திரங்களின் ஓசை என இளைஞர்களின் காது கேளாமை பிரச்சனைக்கு அது முக்கிய காரணியாக அமைகிறது.
இந்த பிரச்சனைக்கு என சில அறிகுறிகள் இருக்கும். அவற்றை உணர்ந்து தொடக்கத்திலேயே பிரச்சனையை கண்டறிந்துவிட்டால் காது கேளாமை பிரச்சனையில் இருந்து நாம் எளிதில் விடுபட்டுவிட இயலும். அவற்றுக்கான அறிகுறிகள் குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.
காதுகளில் சத்தம்: நமது காதுகளில் இரைச்சல் ஏற்படுதல், திடீரென கேட்கப்படும் சத்தம் போன்றவை, வெவ்வேறு விதமான சத்தங்கள் போன்றவை கேட்பது டின்னிடஸ் என்று கூறப்படுகிறது. இது இதய நோய், தைராயிடு பிரச்சனை, காது தொற்று போன்றவற்றை குறிக்கும். வயதானவர்கள் இவ்வாறான பிரச்சனைக்கு ஆளாவார்கள். இதுபோன்ற அறிகுறி இருப்பின் உடனடி பரிசோதனை செய்வது நல்லது. Shortness of Breath: ஆரோக்கியத்தை அறிவோம்.. மூச்சுத்திணறல் என்றால் என்ன?.. அதற்கான காரணங்கள் என்னென்ன?..!
ஒலிகளின் சத்தம்: உரத்த சத்தம் அல்லது குரலுடன் கூடிய சத்தம் கேட்டு திடுக்கிட்டு இருக்கிறதா உங்களுக்கு?. இவ்வாறான உரத்த ஒலியினை கேட்டால் உடலின் செல்கள் அதிர்வடையும். அவை காதுகளை சிதைக்கும்.
நெரிசலில் பேச சிக்கல்: காது கோளாறுக்கு அறிகுறியாக அவர்கள் அமைதியான இடங்களில் பேசும்போது எவ்வித பிரச்சனையும் இருக்காது. ஆனால், மற்றொரு இடத்தில் அல்லது கூட்ட நெரிசலில் பேசும்போது அசௌகரியம் ஏற்படலாம். பிறர் பேசும் வார்த்தைகளும் சரியாக கேட்கவில்லை என்றால் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ளலாம்.
காதுகளில் அடைப்பு: நமது காதுகளில் இருந்து திரவம் வடிதலால் இரண்டு காதுகளும் அடைப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தும். இது வயது அதிகரிக்கும் நேரத்தில் துல்லியமாக ஒலிகளை கேட்க இயலாமல் போக காரணியாக அமையும். குளிக்கும் நேரத்தில் காதில் அதிகளவு தண்ணீர் சென்றாலும் காது அடைக்கும் உணர்வு ஏற்படும்.
மறதி: நமது காதுகளால் தகவலை தெளிவாக கேட்டுப்பெற இயலாத பட்சத்தில், அது எதிராளி கூறும் வார்த்தைகளை நினைவில் ஏற்றாது. அதற்கு கஷ்டப்படும். மறதி காது கிழமையின் அறிகுறியாக கூட இருக்கலாம். மேற்கூறியுள்ள பிரச்சனைகளில் ஏதேனும் ஒன்று இருப்பின், கட்டாயம் மருத்துவரை சந்தித்து காதுகளை சோதித்து கொள்வது நல்லது.