Bus station: 24 மணிநேரமும் பரபரப்புடன் இருக்கும் தமிழக பேருந்து நிலையங்கள் எவை? சுவாரசிய தகவல் இதோ.!
தமிழகத்தில் இரவிலும் பரபரப்பாக இருக்கும் 16 பேருந்து நிலையங்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.
ஜனவரி 30, சென்னை (Chennai News): தமிழகத்தில் சில பேருந்து நிலையங்களில் இருந்து முக்கியமான நகரங்களுக்கு 24 மணி நேரமும் பேருந்துகள் உண்டு. அந்த பேருந்து நிலையங்களில் சில இரவிலும் பரபரப்பாக இருக்கும். அவைகளின் பரபரப்பு அடிப்படையில் எவை முதலிடம்? கடைசி இடம்? என்பதுக் குறித்து இப்பதிவில் காணலாம்.
1.சேலம் புதிய பேருந்து நிலையம்:
சேலம் ஏன் முதலிடம் என்றால் சேலம் நகரில் இருந்து, சென்னை, பெங்களூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், அரூர், தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், திருச்செங்கோடு, கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம் போன்ற நகரங்களுக்கு இரவு முழுவதும் பேருந்துகள் உண்டு. அது மட்டும் இல்லாமல் சேலம் மாவட்டத்தின் உள்ளூர் பகுதிகளான மேட்டூர், எடப்பாடி, ஜலகண்டாபுரம், ஆத்தூர், தம்மம்பட்டி என மற்ற பகுதிகளுக்கும் இரவு முழுவதும் பேருந்துகள் உண்டு. திருப்பூர், கோவை பேருந்து நிலையங்களில் இரவில் பேருந்துகளின் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் புறப்பாடு அதிகமாக இருக்காது.
2. திருச்சி மத்திய பேருந்து நிலையம்
திருச்சியின் பிரதான பேருந்து நிலையமாக திகழ்வது மத்திய பேருந்து நிலையம். இந்தப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்னை,மதுரை, கோயம்புத்தூர் போன்ற வெளிமாவட்டங்கள் வெளியூர்களுக்கு பெரும் அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
3. சென்னை ( கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம்)
சென்னையிலிருந்து வழக்கமாக தினமும் 10,460 பேருந்துகளுடன் இயக்கப்படுகின்றன. சென்னையில் 5 இடங்களுக்கு பதில், கிளாம்பாக்கம் உள்பட 3 இடங்களில் இருந்தே இம்முறை பேருந்துகள் புறப்பட்டுச் செல்லும். கார் உள்ளட்ட வாகனங்களில் செல்பவர்கள் தாம்பரம், பெருங்களத்தூருக்கு பதில், OMR சாலையில் திருப்போரூர், செங்கல்பட்டு வழியாகவும், வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாகவும் பயணிக்கலாம். Today Rasi Palan: 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்.. இன்று நல்ல நேரம்.. முழு விபரம் உள்ளே.!
4. மதுரை மாட்டுத்தாவணி , ஆரப்பாளையம்
மதுரை மாவட்டத்திலேயே முக்கியமான பேருந்து நிலையமாக இருக்கக்கூடியது மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம். இந்த இரண்டு பேருந்து நிலையங்களில் இருந்து தான் தென் மாவட்டங்கள் முதற்கொண்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு அடுத்தபடியாக ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மதுரை மாவட்டத்தின் முக்கிய பங்களிப்பாக இருக்கின்றது.
5. ஈரோடு பேருந்து நிலையம்
ஒரு நாளைக்கு சுமார் 2,530 புறநகர்ப் பேருந்து சேவைகளும், 1,640 நகரப் பேருந்து சேவைகளும் என மொத்தம் 4,200 பேருந்து சேவைகள் வழங்கப்படுகின்றன.நாளொன்றுக்கு சுமாராக 1,10,000 பயணிகள் இந்தப் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
6. கோவை ( காந்திபுரம், சிங்காநல்லூர்)
கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டப் பகுதிகளுக்கும், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டப் பகுதிகளுக்கும், சாயிபாபா காலனியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குன்னூர், கோத்தகிரி, உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
7. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்
விழுப்புரம் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் பொதுவாக அதிகமாகவே காணப்படுகிறது. பண்டிகை நாட்கள், விடுமுறை காலங்கள், மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்ற சமயங்களில் இந்த கூட்டம் மேலும் அதிகரிக்கிறது. Subsidies for Cotton: பருத்தி விவசாயிகளுக்கு ₹11,750 மானியம்.. மானாவாரி பருத்தியில் அதிக மகசூல் பெற.. விபரம் உள்ளே.!
8. கிருஷ்ணகிரி பேருந்து நிலையம்
கிருஷ்ணகிரி பேருந்து நிலையம், மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்து மையமாகும். இங்கு தினமும் 600-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
9. கரூர் பேருந்து நிலையம்
கரூர் நகரின் முக்கிய போக்குவரத்து மையமாக கரூர் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தின் பராமரிப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் பற்றாக்குறை இருப்பதால், பயணிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்தப் பிரச்சினைகளை சமாளிக்க, கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த புதிய நிலையம் 9 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
10. திண்டுக்கல் பேருந்து நிலையம்
திண்டுக்கல் பேருந்து நிலையம், நகரின் முக்கிய போக்குவரத்து மையமாகும். இங்கு நகர்ப்புற மற்றும் புறநகர்ப்புறப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகர்ப்புறப் பேருந்துகள் தினமும் 128 பாதைகளில் 150-க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்குகின்றன. பேருந்து நிலையம், பழனி, திருச்சி, கோடைக்கானல், மற்றும் தென் மாவட்ட நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளையும் சேவையாற்றுகிறது. கோடைக்கானல் சுற்றுலா பருவம் மற்றும் பழனி கோயில் திருவிழாக்களின் போது, பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அந்த நேரங்களில், தினமும் 1,000-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன, மேலும் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை மீறுகிறது.
11. வேலூர் பேருந்து நிலையம்
வேலூர் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் மிகப்பெரிய பணியாக இருப்பது புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி. மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான புதிய பேருந்து நிலையம் சுமார்9.25 ஏக்கர் பரப்பளவில் ரூ.53 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. Egg Sukka Recipe: அட்டகாசமான சுவையில் முட்டை சுக்கா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
12. திருவண்ணாமலை பேருந்து நிலையம்
இங்கு ஒரே நேரத்தில் 54 பேருந்துகளை நிறுத்தும் வகையில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 200 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பலவேறு சிறப்பு அம்சங்களுடன் நவீன வசதிகள் பேருந்து நிலையத்தில் இடம் பெற்றுள்ளன.
13. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம்
புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 10.41 கோடி மதிப்பில் ஆம்னி பஸ் நிலையம் கட்டப்பட்டது. சுமார் 5,400 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்நிலையத்தில் 25 பேருந்துகள் நிறுத்துவதற்கு ஏற்ப நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தரைதளத்தில் 9 கடைகள், ஆம்னி பேருந்துகளின் 18 அலுவலகங்கள், ஆண், பெண் கழிப்பறைகள், பொருள்கள் வைப்பறை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 7 கடைகளும், 6 தங்கும் அறைகளும், கழிப்பறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 01:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

