Vitamin D: வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் தெரியுமா?.. அவற்றை தவிர்க்க இதுதான் வழிமுறை.!
ஜலதோஷ பிரச்சனைகளை விரட்டுவதில் இருந்து, மன ரீதியான அழுத்தங்களை குறைப்பது வரையில் வைட்டமின் டி பங்கு வகிக்கிறது.
பிப்ரவரி 22: எலும்புகள், பற்களுக்கு வைட்டமின் D மிகவும் அவசியமான ஒன்றாகும். நமது உடலில் நடைபெறும் பல முக்கிய உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கு வைட்டமின் டி அடிப்படையாக அமைகிறது.
ஒருவருக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கும் பட்சத்தில் ஆஸ்ட்டியோபோரோசிஸ், ரிக்கட்ஸ், இதயம் சார்ந்த நோய்கள், புற்றுநோய், நீரிழிவு பிரச்சனை போன்றவை ஏற்படும். Actor Prabhu Health Update: சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி; நலமுடன் இருப்பதாக மருத்துவக்குழு தகவல்.!
நமக்கு எளிதில் ஏற்படகூறிய ஜலதோஷ பிரச்சனைகளை விரட்டுவதில் இருந்து, மன ரீதியான அழுத்தங்களை குறைப்பது வரையில் வைட்டமின் டி பங்கு வகிக்கிறது. இதனை நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் இருந்தும் எளிதில் பெறலாம்.
காலை வேளைகளில் சூரியன் உதிக்கும் நேரத்தில் 25 நிமிடங்கள் வரை வெயிலில் உடல் படும்படி நிற்கலாம். அதேபோல, சூரை மற்றும் கானாங்கெளுத்தி, முட்டை போன்ற உணவுகளை சமைத்து சாப்பிட்டும் வைட்டமின் டி சத்துக்களை பெறலாம்.