Avoid Diabetes: சர்க்கரை வியாதி என்றால் என்ன?.. எதனால் அது ஏற்படுகிறது?.. தவிர்ப்பது எப்படி?.. முழு விபரம் உள்ளே.!
இரத்தத்தில் இருக்கும் அதிகளவு சர்க்கரையால் நீரிழிவு நோய் உறுதி செய்யப்படுகிறது.
டிசம்பர், 8: இரத்த சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரழிவு நோய் (Diabetes) இன்சுலின் உற்பத்தி உடலில் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. இரத்தத்தில் இருக்கும் அதிகளவு சர்க்கரையால் நீரிழிவு நோய் உறுதி செய்யப்படுகிறது. இந்நோயை ஆங்கிலத்தில் Diabetes என்று அழைப்பார்கள். மனிதனின் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை உடலுக்கு தேவையான அளவு மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாகிறது.
இந்த இன்சுலின் (Insulin) இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இயலாத அளவு பணி தொய்வு அடைந்தால் அது மரணத்தையும் ஏற்படுத்தலாம். இதனை கண்டுகொள்ளாமல் இருந்தால் இதய நோய், பக்கவாதம், சிறுநீரக கோளாறு, கால் புண், கண் நோய் போன்ற பிற பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இரத்த சர்க்கரை அளவு அதிகம் இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தாகமெடுத்து நீர் குடிப்பது, பசி போன்றவை ஏற்படும்.
உலகளவில் அதிர்ச்சி: கடந்த 1921ல் இன்சுலின் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் இரத்த சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்தாலும், மக்களிடையே மாறிவந்த உணவுப்பழக்கவழக்கத்தால் அது பன்மடங்காக உயர்ந்துவிட்டது. அதனை முற்றிலும் தவிர்க்க கணைய மாற்று அறுவை சிகிச்சையே சரியானது. இது நாட்பட்ட நோய் என்பதால் மாத்திரைகளில் சரியாக அதிக காலம் எடுக்கும். உலகளவில் பத்தொன்பது பேரில் ஒரு நபர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
இந்நோய்க்கு அதிகளவு ஆண்களே அவர்களின் புகை & மதுப்பழக்கத்தால் ஆட்கொள்ளப்படுகின்றனர். அதனைப்போல உடற்பருமன், உயர் இரத்த அழுத்தம் போன்றவையும் பிற காரணியாக அமைகிறது. LIC Policy: எல்.ஐ.சி திட்டத்தில் பாலிசி எடுக்க விரும்புகிறீர்களா?.. இந்த செய்தி உங்களுக்கு தான்.. அசத்தல் டிப்ஸ்.. தெரிஞ்சுக்கோங்க.!
நீரழிவு நோயின் வகைகள்:
Type I Diabetes IDDM: முதல் வகை இரத்த சர்க்கரை நோய் குழந்தை, சிறுவர்-சிறுமியர், இளம் வயதுள்ளவர்களுக்கு ஏற்படும். இவர்களுக்கு இன்சுலின் கொண்டே சிகிச்சை அளிக்க இயலும்.
Type II Diabetes NIDDM: இன்சுலின் சுரப்பியில் இருந்து போதுமான அளவு இன்சுலின் சுரக்காத காரணத்தால் எதிர்வினை ஏற்பட்டு இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இவ்வகை இரத்த சர்க்கரை நோயால் 90% நபர்கள் பாதிக்கப்டுகின்றனர். இவர்கள் உடல் பருமன் பிரச்சனையையும் கொண்டுள்ளனர்.
Type III Diabetes: கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோய் 2% - 4% என்ற அளவில் இருக்கிறது. பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் இது மறையும். ஆனால், பிற்காலத்தில் குழந்தையும்-தாய்க்கும் நீரிழிவு நோய் அதிகரிக்கலாம்.
நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள்:
அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகம், அதிகளவிலான பசி, விரைந்து எடை குறைதல், உடற் சோர்வு, கண்பார்வை குறைதல், காயங்கள் ஆறுவதற்கு நாட்கள் ஆகுதல், ஈறு, சருமம், சிறுநீர்ப்பைகளில் மீண்டும் ஏற்படும் தொற்றுநோய், பாதத்தில் உணர்ச்சி குறைதல்/எரிச்சல்.
நீரழிவு நோயினால் ஏற்படும் விளைவுகள்:
Type II நீரழிவு நோயின் காரணமாக பார்வை இழத்தல், மாரடைப்பு, சிறுநீரக பிரச்சனை, பக்கவாதம், கால்களை இழத்தல், கோமா, இறப்பு போன்றவை ஏற்படும். நீரழிவு நோயினை கவனிக்காமல் விடுவது தவறானது.
உடற்பயிற்சி அவசியம்: நல்ல உணவுப்பழக்க வழக்கம், தினமும் உடற்பயிற்சி செய்தல், சத்துள்ள உணவுகள் & பழங்களை கட்டாயம் சாப்பிடுதல், அளவோடு சாப்பிட்டு வளமோடு வாழுதல் என்று இருந்தால் எவ்வகை நோயும் நம்மை ஒன்றும் செய்யாது.
புகை எமன் : உடலுக்கு கேடுகளை விளைவிக்கும் புகை மற்றும் மதுப்பழக்கம், கொழுப்பு உணவுகள், துரித உணவுகள், சோம்பலை ஏற்படுத்தும் விஷயங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.