Wolfdog Okami: அடேங்கப்பா.. உலகின் விலையுயர்ந்த நாய்.. ரூ.50 கோடி கொடுத்து வாங்கிய பெங்களூர் இளைஞர்.!

நாய் விரும்பியாக சமூக வலைத்தளத்தில் தன்னை அடையாளப்படுத்தியக்கொண்டு பிரபலமாகிய இளைஞர், ரூ.50 கோடி மதிப்புள்ள நாயை வாங்கி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Wolfdog Okami: அடேங்கப்பா.. உலகின் விலையுயர்ந்த நாய்.. ரூ.50 கோடி கொடுத்து வாங்கிய பெங்களூர் இளைஞர்.!
World Most Expensive Dog Cadaboms Okami (Photo Credit: Instagram)

மார்ச் 20, பெங்களூர் (Bangalore News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர் சதிஷ். இவர் செல்லப்பிராணிகள் வளர்ப்பு பிரியர் ஆவார். தற்போது இவர் உலகின் விலையுயர்ந்த நாய் என வருணிப்படும் கலப்பின ஓநாய் (Wolf Dog India) காபோம்ஸ் யோகமியை (Cadaboms Okami) ரூ.50 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறார். செல்லப்பிராணியான யோகமி, நிகழ்ச்சி ஒன்றுக்கு ரூ.25,000 சம்பாத்தியமும் பார்க்கிறது. விலங்கு, ஓநாய் கலப்பில் உருவாக்கப்பட்ட காகசியன் (Caucasian Shepherd) ஷெப்பர்ட், 8 மாத ஹைபிரிட் செல்லப்பிராணி ஆகும். இதனை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்த சதிஷ், அதனை கடந்த சில நாட்கள் முன்பு நிகழ்ச்சி வாயிலாக அறிமுகம் செய்தார். சுமார் 75 கிலோ எடை கொண்ட யோகமி, வலிமை மற்றும் சுறுசுறுப்பு ஆகியவற்றின் அடையாளமாகவும் இருக்கிறது. யோகமி நாள் ஒன்றுக்கு 3 கிலோ அளவிலான இறைச்சியை உணவாக எடுத்துக்கொள்கிறது. Allahabad High Court: "பெண்ணின் மார்பகத்தை பிடித்து, உள்ளாடை கயிற்றை அறுப்பது கற்பழிப்பு குற்றமல்ல" - அலகாபாத் நீதிமன்றம்.! 

எஸ்டேட் வீட்டில் உயரிய கவனிப்புடன் செல்லப்பிராணிகள்:

பாதுகாப்பு கொடுக்கும் விஷயத்துக்கு பெயர்பெற்றதாகவும், தோற்றதால் வசீகரப்படுத்தும் தன்மையுடன் செல்லப்பிராணி யோகமி இருக்கிறது. இந்தியாவில் நாய் வளர்ப்பு சங்கத்தின் தலைவராக உள்ள சதிஷ், ஹைபிரிட் முறையில் உருவாக்கப்பட்ட நாயை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறார். இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் சதீஷ், இந்த அசாதாரண இனத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதை தனது பணியாக மாற்றியுள்ளார். அவர் வந்ததிலிருந்து, ஒகாமி கர்நாடகா முழுவதும் உயர்மட்ட நிகழ்வுகளில் கவனத்தை திருடி, நாய் பிரியர்களையும் வளர்ப்பவர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சதிஷ் நாய்கள் வளர்ப்பதை கைவிட்டு, அரிதான நாய்கள் விஷயத்தில் கவனத்தை செலுத்தி இருக்கிறார். அவர் தனக்கு சொந்தமான ஏழு ஏக்கர் எஸ்டேட்டில், நாய்களை வைத்து பராமத்து வருகிறார். நாய்களுக்கு என பிரத்தியேக அரை, அதனை கவனிக்க ஊழியர்கள் என ஆடம்பர வாழ்க்கை அவைக்கு கிடைத்துள்ளன.

ஓநாய் ரக நாயை இந்தியாவில் அறிமுகம் செய்த சதிஷ்:

 

View this post on Instagram

 

A post shared by Satish S (@satishcadaboms)

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement