Sexual Harassment | Allahabad High Court (Photo Credit: Pixabay / @barandbench X)

மார்ச் 20, அலகாபாத் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காஸ்கஞ்ச் மாவட்டத்தில் வசித்து வரும் 11 வயது சிறுமி, கடந்த 2021ம் ஆண்டு பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டார். சிறுமி சாலையில் சென்றபோது, அப்பகுதியில் வசித்து வரும் பவன் மற்றும் ஆகாஷ் ஆகிய இரண்டு இளைஞர்கள் சேர்ந்து, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டனர். சிறுமி செல்லும் வழியில் இருக்கும் சிறிய அளவிலான பாலத்துக்கு அடியில் சிறுமியை தூக்கிச் சென்றனர். அங்கு சிறுமியின் உடல் அங்கத்தை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்கள், அவரின் உள்ளாடையை அறுத்து பாலியல் வன்கொடுமைக்கு முற்பட்டுள்ளார். ஒன்றரை வயது சிறுவனின் ஆணுறுப்பை அறுத்த கொடுமை; அதிர்ச்சி சம்பவம்..! 

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு:

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த வழிப்போக்கர், சிறுமியை மீட்டு இருக்கிறார். கயவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றாலும், சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் இளைஞர்கள் மீது பட்டியாலி காவல் துறையினர் போக்ஸோ உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த விஷயம் குறித்த வழக்கு காஸ்கஞ்ச் மகிளா சிறப்பு நீதிபதி அமர்வில் நடைபெற்றது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி, இளைஞர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுமியை வன்கொடுமை செய்ய முயற்சித்த நபர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் (Allahabad High Court) மேல்முறையீடு செய்தனர். Wife Killed by Husband: நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவி கழுத்தை நெரித்துக்கொலை; 20 நிமிடங்களாக பரிதவித்த உயிர்.. அதிரவைக்கும் சம்பவம்.! 

அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு:

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் அமர்வு, வழக்கு குறித்த விஷயத்தில் சில மாற்றங்களை செய்து சம்மன் வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா அளித்த வாதங்கள் பின்வருமாறு., "பெண்ணின் மார்பகத்தை (Grabbing Breast) பிடித்து இழுப்பது, அவரின் உள்ளாடை கயிற்றை அறுப்பது (Snapping Pyjama String) போன்றவை கற்பழிப்பு குற்றம் கிடையாது. பலாத்கார முயற்சி கிடையாது. அதே வேளையில் கடுமையான பாலியல் துன்புறுத்தலாக கருதப்படும். கீழமை நீதிமன்றம் வழங்கியுள்ள சம்மன் சட்டபூர்வமானது இல்லை. பவன் மற்றும் ஆகாஷ் ஆகிய இளைஞர்கள் மீது கடுமையான பாலியல் வன்கொடுமை, ஆடைகளை களைய முயற்சி செய்தல் அல்லது அந்த நோக்கத்துடன் தாக்குதல் ஆகிய சிறிய அளவிலான குற்றச்சாட்டுகளின் கீழ் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும். போக்ஸோவின் கடுமையான பிரிவுகள் இவ்வழக்குக்கு பொருந்தாது. பவன், ஆகாஷ் ஆகியோரின் மீது கூறப்பட்டுள்ள புகார்களின் படி, அவர்கள் பலாத்கார முயற்சி குற்றத்தை செய்யவில்லை" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.