Fake Milk Factory: மக்களே உஷார்! பாலில் செய்யப்படும் கலப்படம்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ வைரல்..!

உத்தரப்பிரதேசத்தில் கெமிக்கல் மூலம் போலியாக பால் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Fake Milk Factory (Photo Credit: @x_vault_ X)

டிசம்பர் 10, புலந்த்ஷாஹர் (Uttar Pradesh News): நம் வீட்டில் சமைக்கப்படும் உணவுகளைப் போல வெளியில் சாப்பிடும் அனைத்து உணவுகளும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு தான் சாப்பிடுகிறோம். ஆனால் சமீப காலமாக உணவுப் பொருட்களில் எதிர்பாராத அதிர்ச்சி தரும் பொருட்கள், புழு, பூரான், எலி என கண்டுபிடிக்கப்படுவது வேதனை அளிக்கும் ஒன்றாக உள்ளது.

சமீபத்தில், லேஸ் பாக்கெட்டுகளில் கரப்பான் பூச்சி கண்டறியப்பட்டது. வேஃபர்ஸ் பாக்கெட்டில் ஒரு பொரித்த தவளை கண்டறியப்பட்டது. மேலும் ஒரு குடும்பத்தினர் வாங்கிய ஹேர்ஷேஸ் சாக்லேட் சிரப் பாட்டிலில் இறந்த எலியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி மலாட்டைச் சேர்ந்த 26 வயது மருத்துவர், ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித கட்டைவிரலைக் கண்டுபிடித்தார். Road Accident: சாலையில் தறிகெட்டு ஓடிய பேருந்து மோதி 4 பேர் பலி.. 36 பேர் படுகாயம்..!

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் அமீர்பூர் அகோரா என்ற கிராமத்தில் போலியாக பால் மற்றும் பாலாடைக்கட்டிகள் தயாரித்த குடோனில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். அப்போது, போலியாக பால் தயாரிப்பதற்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்த கெமிக்கல் மற்றும் கலப்படப் பொருட்களைக் கண்டு அதிகாரிகளே அதிர்ச்சியடைந்துள்ளனர். வெறும் ஒரு லிட்டர் ரசாயனத்தின் மூலம் 500 லிட்டர் போலி பால் தயாரித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக இந்தக் கும்பல் போலி பால் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் முக்கியக் குற்றவாளியான அஜய் அகர்வால் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.

பாலில் செய்யப்படும் கலப்படம்: