Dead Body In Parcel: எலக்ட்ரானிக்ஸ் பார்சலில் வந்த சடலம்; ஆவலுடன் எதிர்பார்த்து நடுநடுங்கிய பெண்மணி.. திகிலூட்டும் சம்பவம்.!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரின் சடலம் அடங்கிய பார்சலைப் பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 20, மேற்கு கோதாவரி (Andhra Pradesh News): ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி (West Godavari) மாவட்டம் உண்டி மண்டலத்தில் உள்ள யெண்டகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாக துளசி என்ற பெண். இவர் வீடு கட்ட நிதி உதவி கோரி க்ஷத்ரிய சேவா சமிதியிடம் விண்ணப்பம் செய்திருக்கிறார். தொடர்ந்து சமிதி அந்தப் பெண்ணுக்கு வீட்டு ஓடுகளை அனுப்பியிருந்தது. அந்த பெண் மீண்டும் க்ஷத்ரிய சேவா சமிதியிடம் கட்டுமானப் பணிக்கு மேலும் உதவி கேட்டு விண்ணப்பம் செய்திருக்கிறார். அப்போது மின்சாதனங்கள் வழங்குவதாக சமிதி உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
பார்சலில் வந்த சடலம்:
மின்விளக்குகள், மின்விசிறிகள், சுவிட்சுகள் போன்ற பொருட்கள் வழங்கப்படும் என அந்த பெண்ணிற்கு வாட்ஸ்அப்பில் செய்தி வந்துள்ளது. நேற்று ரவு அந்தப் பெண்ணின் வீட்டு வாசலில் ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டு, அதில் மின்சாதனங்கள் இருப்பதாகத் தெரிவித்துவிட்டு ஒரு நபர் வெளியேறி உள்ளார். அந்த பார்சலைத் திறந்தால், அதில் சடலம் (Dead Body Parcel) இருந்துள்ளது. மேலும் பார்சலில் ₹ 1.30 கோடி கேட்டும், கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால் குடும்பம் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எழுதிய கடிதமும் இருந்துள்ளது. CAT Result 2024: கேட் தேர்வு 2024 முடிவுகள் வெளியீடு; விபரம் உள்ளே.!
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த நபர் 4-5 நாட்களுக்கு முன்பு இறந்து இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். க்ஷத்ரிய சேவா சமிதியின் பிரதிநிதிகளை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.