Cop Died an Accident: சாலை விபத்தில் காவலர் பரிதாப பலி.. சாலை தடுப்பில் மோதி நொடியில் பறிபோன உயிர்.. பதறவைக்கும் காட்சிகள்.!

பணியை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்த காவலர், வாகன விபத்தில் உயிரிழந்த சோகம் டெல்லியில் நடந்துளளது.

East Delhi Cop Pavithran Died in Accident (Photo Credit: @lavelybakshi X)

ஏப்ரல் 29, புதுடெல்லி (New Delhi): டெல்லி மாநில காவல்துறையில், காவல் உதவி ஆய்வாளராக (Delhi Cop Pavithran Died an Accident) பணியாற்றி வருபவர் பவித்ரன் என்கே. இவர் இன்று காலை டெல்லியில் உள்ள பிரகதி மைதன் சுரங்கப்பாதை வழியே, தனது இருசக்கர வாகனத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார். அச்சமயம் அவர் எதிர்பாராத விதமாக சாலைத்தடுப்பில் மோதி கீழே விழுந்தார். அவர் கீழே விழுந்த வேகத்தில் தலை மற்றும் உடல் உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே நொடிப்பொழுதில் பரிதாபமாக உயிரிழந்தார். Heart Attack Death: சின்ன வயதில் இப்படியொரு மரணமா?.. அக்காவின் திருமண நிகழ்வில் மாரடைப்பால் தங்கை பலி.! 

விபத்தின் பதறவைக்கும் காட்சிகள் வைரல்: இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த டெல்லி கிழக்கு காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து காவலரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காவலர் பவித்ரனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பவித்ரன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஆட்டோவிற்கு மிக அருகில் பயணித்து சாலைத்தடுப்பில் மோதி மரணமடைந்த காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. ஆட்டோ ஓட்டுநர் விபத்து ஏற்பட்டதும் நிற்காமல் சென்றதால், சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement