ஏப்ரல் 29, மீரட் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில் (Meerut Girl Dies By Heart Attack) வசித்து வரும் சிறுமி ரிம்ஸா. இவரின் சகோதரிக்கு திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடந்து, அதற்கான கொண்டாட்டத்துடன் இவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். அவர்களின் குடும்ப பாரம்பரியபடி, திருமணத்திற்கு முதல் நாள் ஹரோடி எனப்படும் மணமகளுக்கு மஞ்சள் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் மற்றும் ஆசீர்வாதம் என மணமகள் மனங்குளிர அனைத்தும் நடைபெறும். Avadi Shocker: ஆவடியை அலறவிட்ட இரட்டைக்கொலை; வயோதிக தம்பதி கழுத்தறுத்து படுகொலை.. தலைநகரில் பரபரப்பு சம்பவம்.! 

மாரடைப்பால் சிறுமி பரிதாப மரணம்: இந்நிலையில், இந்நிகழ்ச்சியின்போது மணமகளின் சகோதரி ரிம்ஸா நடனமாடிக்கொண்டு (Haldi Function) இருந்தார். அச்சமயம் திடீரென அவர் மயங்கி சரிந்தார். ரிம்ஸாவை பதறியபடி மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, அவரை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி மாரடைப்பால் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

இளம் வயதிலேயே நடக்கும் சோகங்கள்: இந்த அதிர்ச்சி துயரத்தை அறிந்த உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கலங்கிப்போயினர். சிறுமி நொடியில் சரிந்து விழுந்து மரணத்தை தழுவிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மாரடைப்பு இந்தியாவில் மிகப்பெரிய சுகாதார பிரச்சனையாக உண்டாகி இருக்கிறது. பல இளம்வயதினர் அதனால் மரணமடைகின்றனர்.