Miracle Babies: 2 கருப்பை கொண்ட பெண்... 2 நாட்களில் 2 குழந்தைகள்...!

அமெரிக்காவில் இரண்டு கருப்பைகளுடன் பிறந்த பெண்ணுக்கு இரண்டு கருப்பைகளிலும் கரு உருவாகி இரட்டை குழந்தைகள் பிறந்த அரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

Miracle Babies (Photo Credit: @MobilePunch X)

டிசம்பர் 26, அலபாமா (Alabama): உலகளவில் இதுவரை இரட்டை கர்ப்பப்பைகள் கொண்ட நூறு பெண்களுக்கு இதுபோல இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. 50 கோடி பெண்களில் ஒருவருக்குத்தான் இது போல இயல்பாகக் குழந்தை பிறப்பதும் நேரும். இப்போது இந்த அரிய நிகழ்வு நடந்திருப்பது அலபாமாவில்.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர் (Kelsey Hatcher). இவருக்கு வயது 32. இவரது 17 வயதில் தான் இவருக்கு இரண்டு கருப்பைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் கெல்சி ஹேட்சர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக காலப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். Nirmala Sitharaman Visits Thoothukudi: தென்தமிழக வெள்ளப்பெருக்கு... மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு..!

இந்த நிலையில், மீண்டும் கெல்சி கர்ப்பம் தரித்த போது, அவரது இரண்டு கருப்பைகளிலும் கரு உருவானது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் அலபாமா மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது அழகான இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இவரது முந்தைய மூன்று கர்ப்பத்திலும் ஒரு கருப்பையில் மட்டுமே கரு உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement