Shooting at Shopping Mall in US (Photo Credit: @pycsports X)

செப்டம்பர் 22, வாஷிங்டன் (World News): அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள இண்டியானா மாகாணத்தில் பிரபல ஷாப்பிங் மால் ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் மர்மநபர் ஒருவர், திடீரென துப்பாக்கிச்சூடு (Shot Dead) நடத்தினார். இதில், 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் நேற்று (செப்டம்பர் 21) மாலை 6 மணியளவில் நிகழ்ந்தது. H1B Visa Fees: H1B விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்வு.. வெள்ளை மாளிகை விளக்கம்.!

போலீஸ் விசாரணை:

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளியின் புகைப்படம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிப்பவர்களுக்கு 1000 டாலர் பரிசு வழங்கப்படும் என்று காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.