டிசம்பர் 26, தூத்துக்குடி (Thoothukudi): தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை டிசம்பர் 18-ந் தேதி பெருமழை வெள்ளம் புரட்டிப் போட்டது. அதிலிருந்து இன்னமும் தென் மாவட்டங்கள் மீள முடியாமல் தத்தளிக்கின்றன. குறிப்பாக, இந்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் இம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. Ducati Streetfighter V4 Lamborghini: டுகாட்டி நிறுவனத்தின் புதிய பைக்... இந்தியாவில் புக்கிங் தொடக்கம்..!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு: இதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தூத்துக்குடியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான புகைப்படங்களைக் காட்டி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இழப்பு விவரங்களை எடுத்துரைத்தனர்.
#WATCH | Tamil Nadu: Union Finance Minister Nirmala Sitharaman visits flood affected areas of Thoothukudi and takes stock pic.twitter.com/cFsLKrr5e8
— ANI (@ANI) December 26, 2023