Earthquake in Bay of Bengal: வங்கக்கடலில் ரிக்டர் அளவுகோலில் 4.2 நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!

இயற்கை பேரிடர் மனித உயிர்களுக்கு மட்டுமல்லாது, உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் அச்சுறுத்தலாய் விளங்குவது இயற்கையின் நியதியாக பார்க்கப்பட்டாலும், ஒருபுறம் அச்சவாலை எதிர்கொண்டு வெற்றியடையவும் முயற்சிகள் நடக்கின்றன.

Earthquake File Pic (Photo Credit: Twitter)

ஏப்ரல் 11, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே நிலநடுக்கத்தின் தாக்கம் என்பது மிதமான புள்ளிகள் மதிப்பில் உணரப்பட்டு வருகிறது. புதுடெல்லி, ஜம்மு காஷ்மீர் மற்றும் அதனையொட்டியுள்ள அண்டை நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்படுகிறது. துருக்கி மற்றும் சிரியாவை மையமாக வைத்து, கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை பறித்தது. பல இலட்சக்கணக்கான மக்களின் வீடுகள் மற்றும் குடியிருப்புகளை தரைமட்டமாக்கி, அவர்களை வீதியில் கிடத்தியது.

நிலவியல் ஆய்வாளரின் அடுத்த கணிப்பில் (Earthquake in India) இந்தியா: இவ்வாறான நிலநடுக்கம் ஏற்படும் என டச்சு நிலவிய ஆய்வாளர் பிராங்க் ஹூகார்பேட்ஸ் முன்னதாகவே அதனை கணித்து கூறியிருந்தார். இந்த நிலநடுக்கத்திற்கு பின் தெற்காசியாவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளை மையப்படுத்தி மிகப்பெரிய நிலநடுக்கம் எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் கணித்திருந்தார். அதனை உறுதி செய்யும்பொருட்டு அவ்வப்போது இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. School Van Accident: பள்ளி வாகனம் கவிழ்ந்து பயங்கர விபத்து.. 6 மாணவர்கள் பரிதாப பலி., ஓட்டுனரின் அலட்சியம், அதிவேகத்தில் நேர்ந்த சோகம்.! 

வங்கக்கடலில் நிலநடுக்கம்: ஜப்பான் மற்றும் தைவான் நாடுகளிலும் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டு இருந்தன. இந்நிலையில், இந்தியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் இன்று நள்ளிரவு 12:56 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. கடலுக்குக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நிலநடுக்க ஆய்வு மையமும் உறுதி செய்துள்ளது. அடுத்தடுத்து இந்திய நிலப்பரப்பில் ஏற்படும் நிலநடுக்கங்கள் அனைத்தும் மக்களை அச்சப்பட வைக்கும் வகையில் இருக்கிறது.