Snake in Hostel Food: விடுதியில் வழங்கப்பட்ட உணவில் கிடந்த பாம்பு; 11 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.!
சமைத்து வழங்கப்பட்ட உணவில் இறந்து கிடந்த பாம்பு சாதத்தை சாப்பிட்ட மாணவர்களில் 11 பேர் உடல்நலக்குறைவுடன் அவதிப்பட்டு இருக்கின்றனர்.
ஜூன் 16, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டம், பங்கா (Snake Found on Hostel Food in Banka) பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களின் வசதிக்காக விடுதி வசதியும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு தங்கியிருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு இரவு உணவு பரிமாறப்பட்ட நிலையில், அதனை சாப்பிட்ட 11 பேர் அடுத்தடுத்து வயிறு வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். Padma Shri Swami Sivananda performs Yoga Day: 127 வயதிலும் சர்வதேச யோகா தினத்திற்கு உற்சாகத்துடன் தயாராகும் முதியவர்; அசத்தல் விபரம் இதோ.!
அதிகாரிகள் விசாரணை:
தகவல் அறிந்து காவல் துறையினரும் நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். சுகாதாரத்துறை அதிகாரிகளும் உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு விஷமாக மாறியதன் காரணமாக மாணவர்கள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டது உறுதியானது. ஏற்கனவே மும்பையில் ஐஸ்கிரீம் வாங்கிய பெண்ணின் ஐஸ்கிரீமில் மனித விறல் கிடந்ததாக புகார் எழுந்தது. மீரட்டை சேர்ந்த பெண் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் ஒன்றில் பூரான் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.