Padma Shri Swami Sivananda (Photo Credit: @ANI X)

ஜூன் 16, மும்பை (Maharashtra News): உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் யோகா (Yoga), உலகளவில் ஒருமித்த கருத்துடன், உடல் ஆரோக்கியத்தை வளர்க்கும் பொருட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வொருவரும் யோகா குறித்த விழிப்புணர்வை பெறவும், சர்வதேச அளவில் யோகா குறித்த நன்மைகளை எடுத்துரைக்கவும் ஜூன் மாதம் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. Benefits Of Yoga: நாம் தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..! 

127 வயது யோககுரு தயாராகிறார்:

இந்த நாளில் உலகளவில் உள்ள பல நாட்டு தலைவர்களும், தங்களின் நாட்டு மக்களுடன் பொதுவெளியில் யோகா செய்து உடல்நலத்தை ஒவ்வொருவரும் மேம்படுத்த ஆலோசனை வழங்குவார்கள். அந்த வகையில், இந்தியாவில் ஜூன் 19ம் தேதி யோகா நாளில் பல பொதுஇடங்களில் யோகா நிகழ்ச்சிகள் செய்யவும், விழிப்புணர்வு மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியுடன், அமைச்சரவை சகாக்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் யோகாசனம் மேற்கொள்வார்கள். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த 127 வயது யோககுரு பத்ம ஸ்ரீ சுவாமி சிவானந்தாவும் (Padma Shri Swami Sivananda), சர்வதேச யோகா தினத்தில் யோகா செய்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் ஆதரவாளர்கள் பலரும், யோககுருவுடன் யோகா பயிற்சி மேற்கொள்ளவிருக்கின்றனர்.