Mahindra XUV700 AX5 Select Variants Launched: புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஏ.எக்ஸ்5 கார்.. அதன் விலை எவ்வளவு தெரியுமா?.!
மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் புதியதாக ஏ.எக்ஸ்5 செலக்ட் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மே 24, புதுடெல்லி (New Delhi): மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காரில் புதியதாக ஏ.எக்ஸ்5 செலக்ட் (AX5 Select) வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.16.89 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 7 இருக்கைகள் உடன் மட்டுமே இந்த கார் கிடைக்கும். புதிய எக்ஸ்யூவி700 ஏ.எக்ஸ்5 செலக்ட் வேரியண்ட்டில் சன்ரூஃப், 26.03 செ.மீ-இல் இரட்டை எச்டி சூப்பர்திரைகள் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதிகள் உள்ளன. 6 ஸ்பீக்கர்கள், மடக்கி அட்ஜெஸ் செய்யக்கூடிய ஸ்டேரிங் சக்கரம், காரின் வேகத்தை உணர்ந்து லாக் ஆகும் கதவுகள், 3வது வரிசை இருக்கை பயணிகளுக்கும் ஏசி, 2வது வரிசை இருக்கைகளில் ஆர்ம்ரெஸ்ட் & கப் ஹோல்டர், அட்ஜெஸ் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் உள்ளிட்டவையும் புதிய எக்ஸ்யூவி700 ஏ.எக்ஸ்5 வேரியண்ட்டில் இடம்பெற்றுள்ளன. Job Crisis At IITs: ஐஐடியில் வேலை நெருக்கடி.. 7000 மாணவர்கள் வேலையில்லாமல் தவிப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)