மே 24, புதுடெல்லி (New Delhi): இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனமான ஐஐடியில் (Indian Institute of Technology) படித்தால் கண்டிப்பாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான் அனைவரின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சிகள் ஆழ்த்தியுள்ளது. அதன்படி 2023 முதல் 2024 ஆம் ஆண்டு கல்வியாண்டில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ பருவமானது தற்போது முடிந்து விட்டது.
இருப்பினும் சுமார் 7000 மாணவர்கள் இதுவரை எந்த ஒரு வேலை வாய்ப்பையும் பெறவில்லை (Job Crisis) என தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவலானது ஐஐடி (IIT) கான்பூரில் பயின்ற முன்னாள் மாணவர் தீரஜ் சிங் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல் ஆகும். Mazgaon Motorcycle Accident: மும்பையில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் விபத்து.. சிறுவனின் தந்தை கைது..!
இந்தியாவில் உள்ள ஐஐடியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதில் சவாலாக உள்ளது. ஐஐடியானது சில தொழில் முனைவர்களோடு தொடர்பு கொண்டு வேலைவாய்ப்பு பெற உதவி செய்யுமாறு கோரிக்கைகளும் விடுத்துள்ளதாம். தற்போது 20% முதல் 30 சதவீதம் மாணவர்கள் வரை நடப்பாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கையானது 3400 ஆக இருந்தது. தற்போது 1.2 மடங்கு அதிகரித்துள்ளது.