Bigg Boss Tamil Season 8: "இதுக்கு எதுக்கு டா என்ன அழவச்சி அனுப்புனீங்க" மீண்டும் என்ட்ரி கொடுத்த சச்சனா..!

இன்று வெளியிடப்பட்ட பிக் பாஸ் சீசன் 8 முதல் புரோமோவில் சச்சனா மீண்டும் உள்ளே நுழைந்துள்ளார்.

அக்டோபர் 11, சென்னை (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். முதல் நாளே 24 மணிநேர எலிமினேஷன் பிரிவில் சாச்சனா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) வெளியிடப்பட்ட முதல் புரோமோவில் சச்சனா மீண்டும் உள்ளே நுழைந்துள்ளார்.

மீண்டும் என்ட்ரி கொடுத்த சச்சனா: