PM Narendra Modi: "உங்களை எதிர்பார்த்து உலகமே காத்திருக்கிறது" - பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து.!
சுனிதாவின் வருகைக்காக ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்தனை செய்கிறது. அவர்களின் வருகைக்காக நாங்களும் காத்திருக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி பேசி இருக்கிறார்.
மார்ச் 18, புதுடெல்லி (New Delhi): அமெரிக்காவின் நாசாவில் விண்வெளி வீராங்கனையாக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams), பன்ச் வில்மோர் (Butch Wilmore) ஆகியோர், 8 நாட்கள் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையம் சென்று இருந்தனர். பின் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களின் வருகை தாமதமாகி, கிட்டத்தட்ட 285 நாட்கள் அங்கேயே தங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைகோள் உதவியுடன் அவர்கள் பூமிக்கு திரும்பிக்கொண்டு இருக்கின்றனர். இந்திய நேரப்படி, புதன்கிழமை (நாளை) அதிகாலை 03:00 மணிக்கு மேல் அமெரிக்காவின் கடற்பரப்பில் அவர்கள் தரையிறங்குவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸின் வருகையை எதிர்ப்பது ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்தனை செய்கிறது என பிரதமர் மோடி தனது செய்தியை தெரிவித்து இருக்கிறார். JIO IPL Cricket Plan: கிரிக்கெட் பிரியர்களுக்கு குட் நியூஸ்.. ஜியோ அதிரடி சலுகை.., விவரம் இதோ..!
சுனிதாவின் வருகைக்காக உலகமே காத்திருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)