Trending Video: இரவில் இரயில் நிலையத்தில் அட்ராசிட்டி செய்த பெண்கள்.. நடை மேம்பாலத்தில் டூ வீலரில் பயணம் செய்த வீடியோ வைரல்.!

மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் எளிதில் அணுக சாய்வுதளத்துடன் கொண்ட நடைமேம்பாலத்தை அமைத்தால், அதில் இளைஞிகள் கூட்டம் இருசக்கர வாகனத்தில் பயணித்து அட்ராசிட்டி செய்த சம்பவம் நடந்துள்ளது.

Orai Railway Station Atrocity Visuals (Photo Credit: Twitter)

பிப்ரவரி 17, ஜலான்: உத்திரபிரதேசம் (Uttar Pradesh) மாநிலத்தில் உள்ள ஜலான் மாவட்டம் (Jalaun District), ஓரை நகரில் இரயில் (Orai Railway Station) நிலையம் உள்ளது. இந்த இரயில் நிலையத்தில் மக்களின் வசதிக்காக நடைமேம்பாலம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நடை மேம்பாலம் (Over Bridge) மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயோதிகர்கள் எளிதில் சக்கர நாற்காலியால் அணுகும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவில் அங்கு இருசக்கர வாகனத்தில் (Rider Atrocity) வந்த பெண்கள் குழு, தங்களின் வாகனத்திலேயே அவ்வழித்தடத்தை ஆபத்தான வகையில் அணுகி சாகசம் செய்தது. இதனை வீடியோவாக பதிவு செய்தவர் ட்விட்டரில் (Twitter Video Trending) உத்திரபிரதேச மாநில காவல்துறையை இணைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. Punjab National Bank: துப்பாக்கி முனையில் பஞ்சாப் நேஷனல் வங்கி காசாளரிடம் ரூ.22 இலட்சம் கொள்ளை.. வங்கிக்குள் புகுந்து துணிகரம்.!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement