வானிலை: இன்று மதியம் 1 மணிவரை 21 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

புதுச்சேரி, காரைக்கால் உட்பட பெரும்பாலான வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழைக்கான முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Rain Tamilnadu (Photo Credit: @WeatherRadar_IN X)

நவம்பர் 16, நுங்கம்பாக்கம் (Chennai News): வடகிழக்குப் பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நவ.16ம் தேதியான இன்றும் பல மாவட்டங்களில் மழைக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மதியம் 1 மணிவரையில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், காரைக்கால் மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Special Bus for Sabarimala: ஸ்ரீ ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - முழு விபரம் இதோ.! 

வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இங்கே: