Coimbatore Flood: கோவை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை; சுரங்கப்பாதை நீருக்குள் சிக்கிய பேருந்து.!
எஸ்பிஎம் தனியார் பேருந்து தேங்கியிருந்த மழை நீரில் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 13, கோவை (Coimbatore News): இன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்குப் பருவமழை தீவிரம் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை முதலாகவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம், காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் கனமழையானது தொடர்ந்து வெளுத்து வாங்கி வந்தது. இதனிடையே, கோவை சாயிபாபா காலனி பகுதியில் எஸ்பிஎம் தனியார் பேருந்து, இரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. வானிலை: இன்று 22, நாளை 19 மாவட்டங்களில் கனமழை; சென்னை மக்களே மிககவனம்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
இரயில்வே சுரங்கப்பாதைக்குள் தேங்கியிருந்த நீரில் சிக்கிக்கொண்ட தனியார் பேருந்து:
கோவையில் வெளுத்து வாங்க காத்திருந்த மழை மேகங்கள்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)