Job Alert: மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; இளைஞர்களே தவறவிடாதீங்க.!
சென்னை நந்தனம் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம் வாயிலாக, சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் நிறுவனங்களில் வேலைக்கு பணியமர்த்தப்படுகின்றனர்.
மார்ச் 21, நந்தனம் (Chennai News): தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு வாரமும், மாவட்ட அளவில் வேலை வாய்ப்பு முகாம்கள் சுழற்சி முறையில் மாவட்ட தலைநகர்களில் முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி, (29 மார்ச் 2025) சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பலநூற்றுக்கணக்கான நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான இளைஞருக்கு நேர்காணலுக்கு பின்னர் நேரடி வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. அதேபோல், அன்றைய நாளில் கரூர் தான்தோன்றிமலை அரசு கல்லூரி, கடலூர் மாவட்டம் பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷ்னல் பள்ளி, திருப்பூர் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை கல்லூரி, தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி, மயிலாடுதுறை சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை கல்லூரிகளிலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வானிலை: நாளை 10 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!
சென்னை தனியார் வேலைவாய்ப்பு முகாம்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)