வானிலை: சென்னைக்கு மழை எச்சரிக்கை.. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பொளக்கப்போகும் மழை.!

Rain Alert: தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Chennai Rains | File Pic (Photo Credit: @Unmai_Kasakkum X)

அக்டோபர் 27, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி,  மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும்  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Gold Rate Today: தங்கப்பிரியர்களுக்கு நற்செய்தி.. உயர்வின் உச்சிக்கு சென்று மீண்டும் சரிய தொடங்கிய தங்கம் விலை.!

மழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement