வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

வளிமண்டல சுழற்சி காரணமாக மதியம் 1 மணிவரையில் குமாரி, சிவகங்கை, இராமநாதபுரம் உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Chennai Weather Rains (Photo Credit: @chennaiweather X)

நவம்பர் 21, நுங்கம்பாக்கம் (Chennai News): குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று பரவலாக தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்ட்டுள்ளது. இந்நிலையில், நாகப்பட்டினம், திருவாரூர், இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு, மதியம் 01:00 மணிவரையில், இடி-மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Minister EV Velu: மோசமான வானிலை., அமைச்சர் ஏவ வேலு பயணித்த விமானம்.. மதுரையிலேயே தரையிறக்கம்.!