TN Weather Update: 4 மாவட்டங்களில் 10 மணிவரை தொடரும் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
சென்னை, காஞ்சிபுரம் உட்பட4 மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்துவரும் நிலையில், இன்று காலை 10 மணிவரை மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 11, சென்னை (Chennai): தமிழ்நாட்டில் வரும் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது, தலைநகர் சென்னையில் 2 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்புகள் (Weather Update) உள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையம், தனது நாளைய வானிலை (Tomorrow's Weather) அறிவிப்பில் தகவல் தெரிவித்து வந்தது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை காலை 10 மணிவரையில் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று இரவு முதலாகவே சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துவந்த நிலையில், காலை 6 மணிக்கு மேல் சாரல் மழை தொடர்ந்து வருகிறது. இதனால் மக்கள் குளுகுளு சூழ்நிலையை அனுபவித்து இருக்கின்றனர். எனினும், கல்வி, வேலைகளுக்கு செல்வோர் லேசான சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். Snake Found on Passenger Train: வாலை காட்டி ஆட்டிய பாம்பு; நடுநடுங்கிப்போன பயணிகள்.. இரயில் பயணத்தில் நடந்த சம்பவம்.!