TN Weather Update: 12 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்.!

அடுத்த 3 மணிநேரத்திற்கு கீழக்காணும் 12 மாவட்டங்களில் மழை அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் வானம் மழைக்கான அறிகுறிகளுடன் தென்படுகிறது.

Rain (Photo Credit @THChennai X)

ஜூலை 31, சென்னை (Chennai News): தென்மேற்கு பருவமழையின் தீவிரம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி போன்றவை காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது "நாளைய வானிலை" (Tomorrow Weather) செய்திக்குறிப்பில் தெரிவித்து இருந்தது. இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மதியம் 1 மணிவரையில், அடுத்த 2 மணிநேரத்திற்கு நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி ஆகிய 12 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. TN Weather Update: மீனவர்களுக்கான எச்சரிக்கை.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now