Twitter Blue: ட்விட்டர் புளூ வெரிபைடுகளை நீக்கம் செய்த எலான் மஸ்க்.. அதிரடி மாற்றத்தின் அறிவிப்பு இதோ.!
உலகசெல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர், அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
ஏப்ரல் 20, (Technology News): ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ட்விட்டர் புளூ டிக் முன்பு (Twitter Blue Verified) முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், அவற்றை மாத அல்லது ஆண்டு சந்தாவுக்கு அனைவரும் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதற்கான இறுதி கால கெடுவாக ஏப்ரல் 20ம் தேதி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், புளூ டிக் ஐடிக்களுக்கு வழங்கப்பட்ட இறுதி காலக்கெடு நிறைவு பெற்ற நிலையில், அதனை புதுப்பிக்க தவறியோரின் கணக்குகளில் இருந்த வெரிபைடு ஐடிகளுக்கான அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. வெரிபைடு ஐடிக்களை பெற நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் இரண்டு முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. Apple CEO meets PM Modi: ஆப்பிள் நிறுவன தலைமை அதிகாரி – பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்திப்பு.. பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் என்ன?.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)