Harbhajan Singh Casts his Vote: "உங்களுக்காக உழைக்கும் அரசை தேர்வு செய்யுங்கள்" - வாக்களித்த பின் ஹர்பஜன் சிங் பேட்டி.!
விஐபி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர, தேர்தலில் மக்கள் திரளாக வந்து வாக்களிக்க வேண்டும் என முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
ஜூன் 01, ஜலந்தர் (Punjab News): 18 வது இந்திய மக்களவைத் தேர்தல் 2024 (General Elections India 2024) ஏழுகட்டமாக நடத்தப்பட்ட நிலையில், ஜூன் 01ம் தேதியான இன்று ஏழாவது கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் ஜூன் 04, 2024 அன்று ஒரேகட்டமாக (2024 Elections Results) வெளியாகிறது. மத்தியில் ஆட்சிக்கட்டிலில் அமரப்போகும் அணியை எதிர்பார்த்து இந்திய மக்கள் மட்டுமல்லாது உலகளாவிய தலைவர்களும் காத்திருக்கின்றனர்.
வாக்களித்த பின் ஹர்பஜன் சிங் கோரிக்கை: இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் தொகுதிக்குட்பட்ட தேர்தல் வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்குப்பதிவை உறுதி செய்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh), "இன்றைய நாள் அனைவர்க்கும் மிக முக்கியமான நாள் ஆகும். இந்நாளில் அனைவரும் வந்து வாக்குகளை செலுத்த வேண்டும். உங்களுக்காக உழைக்கும் அரசை நீங்கள் தேர்வு செய்யுங்கள் என்பதை மட்டும் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். JP Nadda Casting his Vote: முதல் ஆளாக வாக்களித்தார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா; வாக்காளர்களுக்கு வேண்டுகோள்.!
ஜனநாயக கடமையாற்றவுள்ள மக்கள் அனைவரும் அடுத்தடுத்து திரளாக வந்து வாக்களிப்பார்கள் என நான் எதிர்பார்க்கிறேன். ஜலந்தரில் அதிகபட்ச வாக்குப்பதிவு என்பது வேண்டும். விஐபி கலாச்சாரம் என்பது முடிவுக்கு வர வேண்டும். ஒருவர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க முடியும் என்றால், இங்கும் காத்திருக்கலாம்" என கூறினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி என்பதும் குறிப்பிடத்தக்கது.