NZ Vs ENG 3rd Test: நியூசிலாந்து அபார ஆட்டம்.. வெளுத்து வாங்கிய கேன் வில்லியம்சன்.., இங்கிலாந்து வெற்றிக்கு இமாலய இலக்கு..!
நியூசிலாந்திற்கு எதிரான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற 658 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 16, ஹாமில்டன் (Sports News): நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் (NZ Vs ENG 3rd Test, Day 3) போட்டி ஹாமில்டன் (Hamilton) நகரில், இந்திய நேரப்படி நேற்று முன்தினம் (டிசம்பர் 14) அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. NZ Vs ENG 3rd Test: கடைசி டெஸ்ட் போட்டி முதல் நாள்; நியூசிலாந்து அணி 315 ரன்கள் குவிப்பு.. லதாம், சான்ட்னர் அரைசதம் விளாசல்..!
அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 97.1 ஓவர்கள் விளையாடி 347 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சான்ட்னர் (Mitchell Santner) 76, டாம் லதாம் 63 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மேத்யூ பாட்ஸ் (Matthew Potts) 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி (Matt Henry) 4 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர், 204 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி, 453 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் (Kane Williamson) 156, வில் யங் மற்றும் டேரில் மிட்செல் தலா 60 ரன்கள் அடித்தனர்.
இதன்மூலம், இங்கிலாந்து அணி வெற்றி பெற 658 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 6 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 18 ரன்கள் அடித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், வெற்றிக்கு 640 ரன்கள் தேவைப்படுகிறது.
கேன் வில்லியம்சன் அபார சதம்: