IPL 2023 Schedule Tamil: 2023 ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியானது.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. முழு விபரம் உள்ளே.!

சர்வதேச கிரிக்கெட் அணிகளில் இருக்கும் வீரர்கள் முதல் உள்ளூர் வீரர்கள் வரை என அனைவரும் ஒன்றினையும் இந்திய அளவிலான இந்திய பிரீமியர் லீக் போட்டிகள் மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கவுள்ளன. தற்போது ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

TATA IPL Schedule 2023 Trophy (Photo Credit: IPL20.Com)

ஐ.பி.எல் 2023: கடந்த 2007-ல் அறிமுகம் செய்யப்பட்டு இந்தியாவில் பிரபலமான விளையாட்டாக (Sports), அனைவராலும் ரசிக்கப்படும் விளையாட்டுகளில் முக்கியமான இடத்தை பெற்றுள்ள கிரிக்கெட் (Cricket) பல பிரிவு ஆட்டங்களாக விளையப்படுகிறது. இந்திய அணியை (Indian Team) சேர்ந்த வீரர்கள் வெளிநாட்டிற்கு சென்று விளையாடுகின்றனர். அதேபோல, அங்குள்ள கிரிக்கெட் அணி வீரர்கள் இந்தியாவிற்கு வருகை தந்து விளையாடுகிறார்கள்.

சர்வதேச நாடுகளுக்கு இடையேயான விளையாட்டு பயணங்கள் (Sports Travel) ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் உதவி செய்கின்றன. இதில் உலகளாவிய வர்த்தகம், முதலீடு என ஒவ்வொன்றும் சிறப்பம்சம் பெறுகிறது. இந்திய ரசிகர்களால் (Indian Cricket Fans) அதிகளவு எதிர்பார்க்கப்படும் போட்டிகள் உலகக்கோப்பை (World Cup) மற்றும் ஐ.பி.எல் தொடர் (IPL League). Beer to Kanwariyas: பக்தர்களுக்கு டின் பீர் வழங்கிய இளைஞர்.. கையெடுத்து கும்பிட்டவாறு கடந்து சென்ற சிவபக்தர்கள்.. ஆப்படித்த கலால் துறை.!

ஐ.பி.எல் போட்டித்தொடரை பொறுத்தமட்டில் சர்வதேச அளவிலான பல நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் (International Cricket Players) வீரர்கள் இந்தியாவிற்குள் நடைபெறும் பல அணிகளுக்கு இடையேயான போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி கோப்பையை (IPL Victory Cup) தட்டிச்செல்வார்கள்.

10 அணிகள் கொண்ட ஐ.பி.எல் தொடரில் கடந்த ஆண்டு 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தமாக 12 அணிகள் 2023ல் ஐ.பி.எல் போட்டியில் களமிறங்குகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள மாநில மொழிகளில் ஹாட்ஸ்டார் (Hotstar) ஓ.டி.டி தளம் வழியேயும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports Television) தொலைக்காட்சி வழியேயும் ஒளிபரப்பு செய்யப்படும்.

TATA IPL 2023 Schedule

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர்கள் ஆமதாபாத், மொஹாலி, லக்னோ (Lucknow), ஹைதராபாத், பெங்களூரு (Bangalore), சென்னை (Chennai), டெல்லி (Delhi), கவுகாத்தி, கொல்கத்தா, மும்பை (Mumbai), ஜெய்ப்பூர் மற்றும் தர்மஷாலா ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறுகின்றன. ஏலங்களை பொறுத்தமட்டில் சாம் கரண் (Sam Curran) 18.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு ஐ.பி.எல் வரலாற்றிலேயே மிகவும் அதிக தொகைக்கு விலைக்குசென்றவர் என்ற பெருமையை தட்டிச்சென்றார். Loan Link Scam: ஒரேயொரு லிங்கை ஆசைப்பட்டு தொட்டதால் வந்த வினை – ரூ.1 இலட்சம் கேட்டு வாட்ஸப்பில் மிரட்டல்.. பரபரப்பு தகவல்..!

அல் ரவுண்டரான ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் (Cameron Green) ரூ.17.5 கோடிக்கும், இங்கிலாந்து அணியின் வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) ரூ.16.25 கோடிக்கும், ஹாரி ப்ரூக் (Harry Brook) ரூ.13.25 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அனுபவம், திறமை, விரைவு, அனுகூலம் என கிரிக்கெட்டில் பல ஜவான்களை தனித்தனியே கண்ட உலகம், இந்திய மண்ணில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் (Indian Premier League) வாயிலாக அவர்களின் திறமையை ஒருங்கே 52 க்கும் அதிகமான நாட்கள் தினமும் வீடுகளில் இருந்தவாறு கண்டு வியப்பார்கள்.

கடந்த காலங்களை போல அல்லாமல், தான் அறிமுகம் செய்யப்பட்ட முதல் சீசனிலேயே ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணி ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டு வெற்றிக்கோப்பையை பெற்றது. கடந்த சீசன் வரையில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி 5 வெற்றிக்கோப்பையையும், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி 4 வெற்றி கோப்பையையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணி 2 வெற்றி கோப்பையையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sun Rises Hyderabad), ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் தலா ஒரு கோப்பையையும் பெற்றுள்ளன.

நடப்பு 2023ம் ஆண்டில் மார்ச் 31ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் போட்டி தொடர்ச்சியாக 74 ஆட்டங்களை வெளிப்படுத்தி, மே மாதம் 21ம் தேதி நிறைவு பெறுகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் - குஜராத் டைட்டன்ஸ் அணியும் அகமதாபாத் (Ahmedabad) மைதானத்தில் (Stadium) வைத்து மோதுகின்றன. இதனை பி.சி.சி.ஐ (BCCI) கண்காணிக்கிறது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 17, 2023 07:20 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement