IPL 2025: இன்னும் 10 நாட்கள் தான்.. ஐபிஎல் 2025 போட்டிக்கான கவுண்டவுன் தொடக்கம்.. போட்டி அட்டவணை, தேதி, நேரம் விபரங்கள் இதோ.!
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் 2025 போட்டிகள் சில நாட்களில் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கவுள்ளது. அதுதொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தொடர்ந்து பெறவும்.
மார்ச் 12, புதுடெல்லி (Sports News): 2025ம் ஆண்டுக்கான 18 வது டாடா இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் (18th TATA IPL Premier League 2025) போட்டிகள், மார்ச் மாதம் 22, 2025 முதல் தொடங்கி, மே மாதம் 25, 2025 வரை நடைபெறுகிறது. இந்திய அளவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings), டெல்லி கேபிட்டல்ஸ் (Delhi Capitals), குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders), லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Lucknow Super Giants), மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians), பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings), ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bengaluru), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) ஆகிய அணிகள் மோதுகின்றன. IPL Schedule Full List in Tamil: டாடா ஐபிஎல் 2025 போட்டிகள்.. எந்த ஆட்டம் எப்போது? எங்கு? முழு விபரம் தமிழில் இதோ.!
தொடக்கம் முடிவு எப்போது (IPL Starting Date and End Date):
இறுதிப்போட்டியுடன் சேர்த்து மொத்தமாக 79 போட்டிகள் நடைபெறும். சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி, லக்னோ, குஜராத் உட்பட பல இடங்களில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் மொத்தமாக 79 போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி 22 மார்ச் 2025 சனிக்கிழமை அன்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இரவு 07:30 மணியளவில் தொடங்கி, 20 ஓவர் முறையில் ஆட்டம் நடைபெறும். அதேபோல, இறுதிப்போட்டி 25 மே 2025 ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மட்டும் 7 போட்டிகள் நடைபெறுகின்றன. IPL Schedule PDF Download: ஐபிஎல் 2025 போட்டி அட்டவணை பிடிஎப் பைல் பதிவிறக்கம் செய்வது எப்படி? விபரம் உள்ளே.!
போட்டிகள் தொடங்குகிறது:
இன்னும் சரியாக 10 நாட்களில் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. இதனை முன்னிட்டு ஐபிஎல் வலைப்பக்கத்தில், 2025 ஐபிஎல் போட்டிக்கான கௌண்டவுன் தொடங்கியுள்ளதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இப்போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் காணலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சியில், தமிழ் மொழியிலும் போட்டியை கண்டு ரசிக்கலாம். IPL 2025: ஐபிஎல் 2025 போட்டிகள்.. முழு பட்டியல் இதோ.!
10 நாட்களில் ஐபிஎல் போட்டிகள்:
The final countdown begins ⏰#TATAIPL 2025 is just 1️⃣0️⃣ days away 🥳 pic.twitter.com/kgtOJJZZKl
— IndianPremierLeague (@IPL) March 12, 2025
(The above story first appeared on LatestLY on Mar 12, 2025 06:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

