MI Vs GT: பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் வெளுத்துக்கட்டும் குஜராத் டைட்டன்ஸ்; தாங்குமா? சென்னை சிங்கங்கள்..!
கிரிக்கெட் அணியின் பக்கபலமாக இருக்கும் பந்துவீச்சு, பேட்டிங் வரிசையில் சிறந்து விளங்கும் குஜராத் அணியை சென்னை எப்படி எதிர்கொள்ளப்போகிறதோ என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மே 27, நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் (Cricket News): டாடா ஐ.பி.எல் 2023 கிரிக்கெட் தொடரின் 73-வது ஆட்டம் நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பைனலுக்கு நுழைய குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி பலபரீட்சை நடத்தியது.
ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், குஜராத் அணி பேட்டிங் செய்த்து. குஜராத் அணி சார்பில் விளையாடிய ஷுபனம் ஹில் 60 பந்துகளில் 129 ரன்கள் அடித்து அணியின் ரன்களை உயர்த்த பேருதவி செய்தார். சாய் சுதர்ஷன் 31 பந்துகளில் 43 ரன்னும், ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 28 ரன்னும் அடித்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்திருந்தது. Dam Empty For Mobile: செல்போனுக்காக அணை நீரை காலி செய்த அரசு அதிகாரி பணியிடைநீக்கம்; அதிரடி நடவடிக்கை.!
234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் சார்பில் விளையாடிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். சூரியகுமார் 38 பந்துகளில் 61 ரன்னும், திலக் வர்மா 14 பந்துகளில் 43 ரன்னும், கேமரூன் 20 பந்துகளில் 30 ரன்னும் அடித்திருந்தார். 18.2 ஓவரில் தனது 10 விக்கெட்டுகளையும் இழந்த மும்பை அணி, 171 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை அடைந்தது.
மோஹித் ஷர்மா தான் வீசிய 2 ஓவரில் மொத்தமாக மும்பை அணியின் 5 விக்கெட்டுகளை சரித்தார். இதனால் நாளை (மே 28) அன்று நடைபெறவுள்ள இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் - சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இறுதி போட்டியில் யார் வெல்வார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த இறுதி போட்டி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.