NZ Vs ENG 3rd Test: கடைசி டெஸ்ட் போட்டி முதல் நாள்; நியூசிலாந்து அணி 315 ரன்கள் குவிப்பு.. லதாம், சான்ட்னர் அரைசதம் விளாசல்..!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்து 315 ரன்கள் குவித்துள்ளது.
டிசம்பர் 14, ஹாமில்டன் (Sports News): நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் (NZ Vs ENG 3rd Test, Day 1) போட்டி ஹாமில்டன் (Hamilton) நகரில், இந்திய நேரப்படி இன்று (டிசம்பர் 14) அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. Look Back Sports 2024: 2024ம் ஆண்டில் விளையாட்டில் நாம் எதிர்பார்க்காத திருப்புமுனைகள்.. உள்ளூர் முதல் உலகம் வரை.. அசத்தல் விபரம் இதோ..!
அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் வில் யங் - டாம் லதாம் இணை நிதானமாக விளையாடி 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அப்போது, வில் யங் 42 ரன்களில் அவுட்டானார். அடுத்து கேப்டன் லதாம் (Tom Latham) 63 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கேன் வில்லியம்சன் 44 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேற நியூசிலாந்து அணி சற்று தடுமாறியது.
இறுதியில், தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடும் டிம் சவுதி (Tim Southee) அதிரடியாக 3 சிக்சர்களை பறக்கவிட்டு, 10 பந்தில் 23 ரன்கள் அடித்து அவுட்டாகினார். மறுபுறம் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து, மிட்செல் சான்ட்னர் (Mitchell Santner) அரைசதம் கடந்தார். இதன்மூலம், நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்களை இழந்து 315 ரன்கள் அடித்துள்ளது.