RSA Vs PAK 3rd ODI: சொந்த மண்ணில் தொடரை இழந்த தென்னாப்பிரிக்கா.. ரிஸ்வான் தலைமையில் பாகிஸ்தான் அசத்தல்..!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.

RSA Vs PAK 3rd ODI (Photo Credit: @Abdulla23422152 X)

டிசம்பர் 23, ஜோகன்னஸ்பர்க் (Sports News): தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் (South Africa Vs Pakistan 3rd ODI) அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் 2 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி ஏற்கெனவே வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றியது. இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நேற்று (டிசம்பர் 22) ஜோகன்னஸ்பர்க்கில் (Johannesburg) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  Kallidaikurichi S Viswanathan: காசி விஸ்வநாதனுக்கு பாராட்டு; தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமி பெருமிதம்.!

இமாலய இலக்கு:

இந்நிலையில், போட்டி தொடங்கும் முன்னர் மழை பெய்த காரணத்தால் இந்த போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 47 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 308 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சைம் அயூப் 101 ரன்கள் அடித்தார். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா (Kagiso Rabada) 3 விக்கெட் வீழ்த்தினார்.

பாகிஸ்தான் வெற்றி:

இதனைத்தொடர்ந்து 309 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 42 ஓவர்களில் 271 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கிளாசன் (Heinrich Klaasen) 81 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. பாகிஸ்தான் அணியின் சைம் அயூப் (Saim Ayub) ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார். இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது.